Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

12.31.2012

கூட்டுக் குடும்பத்துக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு...!

கூட்டுக் குடும்பத்துக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு...!

11.21.2012

முஸ்லிம்களை மோசமாக சித்தரிக்கும் விஸ்வரூபம்! சர்ச்சையில் சிக்கியுள்ள கமல் வைத்தியசாலையில் அனுமதி

முஸ்லிம் சமூகத்தை மோசமாக சித்தரிக்கும் ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளால் கமலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுப்புது தொழில் நுட்பங்களோடு விஸ்வரூபம் படத்தை இயக்கி, தயாரித்துள்ள கமல், அதனை வெளியிடுவதில் சிக்கலை எதிர் கொண்டுள்ளார்.
தலிபான் போராளிககளும் தலிபான்- அமெரிக்காவுக்கு இடையே நடந்த ஆப்கான் போரும் கதையின் மையமாகியிருப்பதால் முஸ்லிம்களை கமல் மோசமானவர்களாக சித்தரித்திருக்கிறார் – அவரது இப்படத்தில் இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இஸ்லாமிய அறிஞர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் “விஸ்வரூபம்´ படத்தை போட்டுக் காட்ட வேண்டும். அதில் ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பது தெரிய வந்தால் அதை நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தினால் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலால் கமலுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

ஆனால் அது வதந்தி என்றும் கமல் மிகுந்த ஆரோக்கியத்துடன் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தின் பிரிமியர் ஷோவை அமெரிக்காவில் வெளியிடும் வேலைகளிலும் ஹாலிவுட்டில் படம் பண்ணுவது பற்றிய முன்னோட்டத்திலும் பிஸியாக இருப்பதாகவும் கமல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




மஞ்சள் கலர் தாலி பிடிக்காமல் திருமணத்தை நிறுத்திய விசித்திர மணப்பெண்.!

வரதட்சணைக்காக திருமணம் தடைபடுவது கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஈரோடு அருகே திருமண வீட்டில் தாலிக்கயிற்றின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக காரணம் கூறி மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
ஈரோடு பெரியவலசுவை கல்லூரி மாணவிக்கும் திருச்செங்கோடு வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. நேற்று மணநாள் என்பதால் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் மண்டபத்தில் குவிந்தனர்.
முகூர்த்த நேரம் நெருங்கியதும் மணமகன், மணமகளை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தனர். மணமகன் தாலி கட்டும் நேரத்தில் அதை மணப்பெண் தடுத்து நிறுத்தினார். இதனால் மாப்பிள்ளையும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இதற்கு மணப்பெண் கூறிய காரணம்தான் அங்கே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘தாலிக்கொடி மஞ்சள் நிறத்தில் உள்ளது.
இந்த நிறம் எனக்கு ராசி இல்லை.அதனால் திருமணம் செய்ய விருப்பமில்லை’ என்று கூறிவிட்டு நடையை கட்டினார்.
மணமகளின் பெற்றோர் மாப்பிள்ளை வீட்டாரை சமாதானம் செய்து தங்கையை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
ஆனால் மணமகளின் தங்கையும் மறுத்துவிட்டார். உடனடியாக மற்றொரு உறவினர் பெண்ணை தேடி, திருமணம் நடந்தது.
காதலருக்காக காத்திருக்கிறேன்.
திருமணத்துக்கு மறுத்த பெண்ணிடம் ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் ஒருவரை ஒருதலைப்பட்சமாக காதலிப்பதாகவும் அவருக்காக காத்திருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து மகளிர் போலீசார் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை கூறி அவரது பெற்றோரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மஞ்சளுக்கு பெயர் போன ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் கலர் தாலி பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

6.30.2010

சென்னை பல்கலை பட்டப்படிப்பு இறுதித் தேர்வு முடிவுகள்


சென்னை பல்கலைக் கழகம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்திய இளநிலை பட்டப்படிப்பின் இறுதி ஆண்டுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

6.29.2010

சென்னையில் டெண்டுல்கர்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் இன்று சென்னை வந்தார்.

சச்சின் டெண்டுல்கர் இன்று காலை விமானத்தின் மூலம் மும்பையிலிருந்து சென்னை வந்தார்.

எனினும் அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. தனிப்பட்ட விஜயமாக சச்சின் டெண்டுல்கர் சென்னை வந்ததாக கருதப்படுகிறது.

அநேகமாக விளம்பர பட ஷýட்டிங்கில் நடிப்பதற்காக சச்சின் சென்னை வந்திருப்பதாக கூறப்படுகிறது.

6.28.2010

குஜராத்தில் மேலும் ஓர் எண்ணெய்க் கிணறு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் மேலும் ஓர் எண்ணெய்க் கிணறை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. ÷சிபி10ஏ-என்1 என்ற பகுதியில் ஹைட்ரோகார்பன் படிமங்கள் இருப்பதாக நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.÷இந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து நாளொன்றுக்கு 410 பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதியில் மொத்தம் 17 இடங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் அகழ்வுப் பணியை மேற்கொண்டுள்ளது. அதில் 6 கிணற்றில் மட்டுமே எண்ணெய் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது மேலும் ஒரு எண்ணெய்க் கிணறு கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இந்த எண்ணெய்க் கிணறுக்கு திருபாய்-50 என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 7 எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், எவ்வளவு எண்ணெய் கிடைக்கும் என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.÷இந்த எண்ணெய்க் கிணறு குறித்த அறிவிப்பை அரசுக்கும் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகத்திடமும் தெரிவித்து விட்டதாகவும் நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ÷சிபி-ஓஎன்என்-2003 எண்ணெய்க் கிணறு ஆமதாபாதிலிருந்து 130 கி.மீ. தொலைவில் காம்பே வளைகுடாவில் அமைந்துள்ளது. இரு பகுதிகளைக் கொண்ட இந்த பகுதியின் மொத்த பரப்பு 635 சதுர கிலோமீட்டராகும். இந்தப் பகுதி முழுவதிலும் எண்ணெய் அகழ்வுப் பணிக்கான முதலீட்டை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீúஸ செய்துள்ளது. அரசின் புதிய எண்ணெய் அகழ்வு கொள்கையின்படி (என்இஎல்பி) நடத்தப்பட்ட ஏலத்தில் இந்தப் பகுதிக்கான லைசென்ûஸ இந்நிறுவனம் பெற்றது.÷இந்தப் பகுதி முழுவதும் 2-டி செஸிமிக் முறையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 80 சதவீத பகுதியில் 3-டி செஸிமிக் முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 17 எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டன. இதில் 13 கிணறுகள் முதல் பகுதியில் அமைந்துள்ளன. ÷கடந்த 11-ம் தேதி 6-வது எண்ணெய்க் கிணறு அகழ்வு குறித்த தகவலை ரிலையன்ஸ் வெளியிட்டது. தற்போது 7-வது எண்ணெய்க் கிணறு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

6.24.2010

தமிழில் வாதாட அனுமதிக்க கோரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும், ஆங்கில மொழியாக்க தொழில்நுட்பத்தை செயல்படுத்த உத்தரவிடவேண்டும் என்று கோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள அகில இந்திய இளநிலை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌‌ட்டு‌ள்ள பொதுநல மனு‌வி‌ல், ‌பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் ‌நீ‌திம‌ன்ற‌ங்களில் பிராந்திய மொழியான இந்தியில் வாதாடப்பட்டு வருகிறது.

தமிழ் மொழி மூலம் பாட வகுப்பு நடத்தும் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌ம், மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையிலும் உள்ள ஆவணங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் மொழி பெயர்ப்புக்காக ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல் உள்ள குமாஸ்தாக்களின் உதவியை நாட வேண்டி உள்ளது.

தங்கள் மனதில் உள்ள வாதத்தை தமிழ் மொழியில் முன்வைக்க அவர்களால் இயலவில்லை. சட்டப்பிரிவு 348-ன் படி குடியரசு‌த் தலைவ‌ரின் ஒப்புதலைப் பெற்று மாநில ஆளுநர், பிராந்திய ‌நீ‌திம‌ன்ற‌ங்களில் பிராந்திய மொழிகளில் வாதாட அனுமதி அளிக்க அதிகாரம் உள்ளது.

தமிழ்நாட்டில் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல் தமிழில் வாதாட அனுமதி கோரி போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை நிலுவையில் உள்ளது. வக்கீல்கள் தமிழில் வழக்காட அனுமதிக்கும்படி தமிழக முதலமைச்சரும் உள்துறை அமைச்சகத்தை கோரியுள்ளார்.

அரசியலமைப்பு சட்டம் 14ன் அடிப்படையில் வழ‌க்க‌றிஞ‌ர்கள் தாய்மொழியில் வாதாட சில மாநில ‌நீ‌திம‌ன்ற‌ங்களில் அனுமதி அளிக்கப்பட்டது போல் அனைத்து மாநில உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ங்களிலும் இதே நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும். ஐ.நா.சபையில் பிராந்திய மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாய்மொழியில் பேசும் போது மொழி பெயர்ப்பாளர் மூலம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இதேபோல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளும் பிராந்திய மொழியில் நடைபெறும் வாதங்களை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பாளர் மூலம் மொழியாக்கம் செய்து கொள்ளும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌திலு‌ம், மாநில உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தமிழில் வழக்காடும் உரிமை கோரும் தமிழக வழ‌க்க‌றிஞ‌ர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எ‌ன்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இ‌ந்த மனு‌வி‌ல் மத்திய உள்துறை செயலர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலர், மத்திய சட்டத்துறை செயலர், இந்திய வழக்கறிஞர் சங்க தலைவர், தமிழக அரசின் தலைமைச் செயலர், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

6.23.2010

இந்திய விமானப் படையில் சச்சினுக்கு குரூப் கேப்டன் அந்தஸ்து

கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு விமானப் படையில் குரூப் கேப்டன் என்கிற கௌரவ பதவி வழங்கப்படவுள்ளது.இதுகுறித்து விமானப் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சாதனையாளர்களுக்கு இந்திய ராணுவத்தின் முப்படைகளில் கெüரவ பதவிகளை வழங்குவது வழக்கம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோருக்கு இத்தகைய கெüரவப் பதவிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் சச்சினுக்கு விமானப்படையில் குரூப் கேப்டன் பதவி அளித்து கெüரவிக்கப்படவுள்ளது. கிரிக்கெட்டில் சச்சின் படைத்துள்ள சாதனைகளை கெüரவிக்கும் விதமாக இந்த பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளது.சச்சினுக்கு விமானப் படையில் கெüரவ பதவி அளிப்பதன்மூலம், படையில் சேர்வதற்கு இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சச்சினுக்கு குரூப் கேப்டன் பதவியை அளிப்பதற்கான ஏற்பாடுகளை விமானப் படை செய்து முடித்துள்ளது. குடியரசுத் தலைவரும், பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த கெüரவப் பதவி சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்படும்.சச்சின் பெருமிதம்: குரூப் கேப்டன் கெüரவப் பதவி தனக்கு வழங்கப்படவுள்ளது பெருமிதம் அளிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.லண்டனிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்த கெüரவம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விமானப் படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளது இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கிறது.இந்திய விமானப் படையின் விளம்பரத் தூதராக பணியாற்றவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கெüரவத்துக்காக மீண்டும் ஒரு முறை வணங்குகிறேன் என்றார் அவர்.

6.22.2010

செம்மொழி அந்தஸ்து தமிழ் மொழிக்கு எப்படிக் கிடைத்தது!

கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. தமிழுக்கு நல்ல செறிவான தொன்மையான இலக்கியமும், இலக்கண பாரம்பரியமும், தனக்கென தனி எழுத்து கட்டமைப்பும், எந்த இடைவெளியும் இல்லாத தொடர்ந்த செழுமையான வளர்ச்சியும் கொண்டது தமிழ் மொழி. தமிழ்நாட்டில் முதன்மையாகவும், மற்ற நாடுகளிலும் தொடர்ந்து கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் பேசப்பட்டு வளர்ந்து வருகிறது. தமிழ் மொழி இக்காலத்திற்கேற்ப தன்னை வளர்த்துக் கொண்டாலும், அதன் தொன்மைத் தன்மையும், மொழி அம்சங்களும் மாறாமல் கட்டிக் காக்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் நிர்வாகம் வேறு மொழிகளைச் செம்மொழிகளாக அறிவித்து, அவற்றின் வளர்ச்சிக்கு சிறப்பான உதவிகளைச் செய்து வந்தது. இதன் அடிப்படையில் தூண்டப்பட்டு தமிழ் நாட்டிலிருந்தும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கேட்கப்பட்டு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. வெளிநாட்டில் வாழும் தமிழ் அறிஞர்களும் இந்த வேண்டுகோளினை ஆய்வுப் பூர்வமான ஆதாரத்துடன் பரிந்துரைத்து கேட்டு வந்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜார்ஜ் எல் ஹார்ட் என்னும் தமிழ் அறிஞராவார். 2000 ஆம் ஆண்டில் இது குறித்து எழுதியபோது, அப்போது செம்மொழிகள் என உலகம் எங்கும் பேசப்பட்டு வந்த பெர்சியன், சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன், சீனம் மற்றும் அரபி மொழிகளுக்கு ஈடாகவும் இணையாகவும் தொன்மையையும், இலக்கண இலக்கியத்தையும் தமிழ் கொண்டிருப்பதனாலேயே, இதற்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை வலியுறுத்தினார்.

இவருக்கு முன் இதே கருத்தினை கால்டுவெல் (1814-1891) பரிதிமாற் கலைஞர் வி.ஜி. சூர்யநாராயண சாஸ்திரி, மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோரும் வலியுறுத்திப் போராடி வந்தனர்.
இயக்கமாக சைவ சித்தாந்த சமாஜம் 1918ல் இந்த கோரிக்கையை வைத்தது. பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் கரந்தை தமிழ்ச் சங்கம் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு இதே வேண்டுகோளை வைத்தது.
பின்னர் 1996 ஆம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டில், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டுமென்று கேட்டு தீர்மானம் இயற்றப்பட்டது. இதுவே 1996 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்தது. விழுப்புரத்தில் பின்னர் 2004ல் நடந்த மாநாட்டிலும் இதே தீர்மானம் வலியுறுத்தப்பட்டது.

பின் 2004ல் நடைபெற்ற பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதியாய் இருந்த தமிழர் அப்துல் கலாம், தமிழ் ஒரு செம்மொழி என அறிவித்தார். 2004 செப்டம்பரில், செம்மொழி அந்தஸ்து ஒரு மொழிக்கு வழங்கத் தேவையான அம்சங்களை மத்திய அரசின் குழு வரையறை செய்தது. பின் 2004 அக்டோபர் 12ல் இந்திய அரசு தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கி அறிவிப்பு வெளியிட்டது. சுதந்திர, இந்திய மக்கள் அரசில் முதல் செம்மொழி அறிவிப்பு பெற்ற மொழி தமிழ் மொழியே. நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்களால் வேண்டப்பட்ட ஒரு கனவு இதன் மூலம் நிறைவேறியது.

கிரேக்கம், லத்தின் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் செம்மொழிகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் மக்களால் பேசப்பட்டு உயிருடன் வாழும் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழி தமிழ் மொழி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

பொது இட‌த்‌தி‌ல் த‌ம்ப‌திய‌ர் மு‌த்த‌ம் கொடு‌ப்பது ஆபாச‌மி‌ல்லை- டெ‌ல்‌லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌ம்

பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. அ‌திலு‌ம் ‌பி‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் த‌ம்ப‌திக‌ள் ச‌ந்‌தி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் போது மு‌த்த‌ம் கொடு‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லை எ‌ன்று உய‌ர்‌நீ‌திம‌ன்ற ‌‌நீ‌திப‌திக‌ள் ஒரு ‌தீ‌ர்‌ப்‌பி‌ல் கூ‌றியு‌ள்ளன‌ர்.

டெ‌ல்‌லி துவாரகா மெ‌ட்ரோ ர‌யி‌ல் ‌நிலைய‌ம் அரு‌கி‌ல் ஒரு இள‌ம் ஜோடி ‌சி‌ரி‌த்து‌ப் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது அவ‌ர்க‌ள் ஒருவரு‌க்கொருவ‌ர் மு‌த்த‌த்தை ப‌ரிமா‌றி‌க் கொ‌ண்டதாக‌த் தெ‌ரி‌கிறது. இதை அ‌வ்வ‌ழியே செ‌ன்ற ‌சில‌ர் காவ‌ல்‌நிலை‌ய‌த்‌தி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

உடனடியாக காவல‌ர்களு‌ம் ‌விரை‌ந்து வ‌ந்து, அ‌ந்த ஜோடியை கைது செ‌ய்து காவ‌லி‌ல் வை‌த்தன‌ர். இது கு‌றி‌த்து அ‌ந்த ஜோடி‌யின‌ர் டெ‌ல்‌லி உய‌ர்‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மனு தா‌க்க‌ல் செ‌ய்தன‌ர். எ‌ங்களது காதலு‌க்கு இருவரது ‌‌வீ‌ட்டிலு‌ம் எ‌தி‌ர்‌ப்பு இரு‌ந்ததா‌ல் ஆ‌ர்ய சமா‌ஜ் கோ‌யி‌லி‌ல் நா‌ங்க‌ள் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்டோ‌ம். ‌‌திருமண‌த்தை ப‌திவு செ‌ய்து கொ‌ள்ளு‌ம் வரை இருவரு‌ம் அவ‌ரவ‌ர் ‌வீ‌ட்டி‌ல் வா‌ழ்‌ந்து வரு‌கிறோ‌ம்.

இ‌ந்த நேர‌த்‌தி‌ல்தா‌ன் நா‌ங்க‌ள் துவாரகா ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌‌தி‌ல் ச‌ந்‌தி‌த்து‌ப் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ந்தோ‌ம். ஆனா‌ல் நா‌ங்க‌‌ள் மு‌த்த‌ம் கொடு‌த்து‌க் கொ‌ள்ள‌வி‌ல்லை. செ‌ல்போ‌னி‌ல் நா‌ங்க‌ள் இருவரு‌ம் ஒ‌ன்றாக இரு‌ப்பது போல புகை‌ப்பட‌ம் எடு‌‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தோ‌ம். இதை யாரோ ‌சில‌ ‌விஷ‌மிக‌ள் காவ‌ல்‌நிலைய‌த்‌தி‌ல் புகா‌ர் அ‌ளி‌த்து அவ‌ர்க‌ள் எ‌ங்களை கைது செ‌ய்தன‌ர். நா‌ங்க‌ள் ‌திருமணமானவ‌ர்க‌ள் எ‌ன்று சொ‌ன்னதையு‌ம் காவ‌ல்துறை‌யி‌ன‌ர் கே‌ட்க‌வி‌ல்லை. எ‌ங்க‌ள் ‌மீதான வழ‌க்கை ர‌த்து செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ந்த மனு‌வி‌ல் கூற‌ப்ப‌ட்டிரு‌ந்தது.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த ‌நீ‌திப‌தி முர‌ளித‌ர், த‌ம்ப‌தி ‌‌மீது ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள வழ‌க்கு‌க்கு தடை ‌வி‌தி‌த்தா‌ர்.

மேலு‌ம் அவ‌ர் தனது ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், பு‌திதாக ‌திருமணமான த‌ம்ப‌திய‌ர் பொது இட‌ங்க‌ளி‌ல் மு‌த்த‌ம் கொடு‌த்து கொ‌ள்வது ஆபாசம‌ல்ல. அ‌திலு‌ம் ‌பி‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம் த‌ம்ப‌திக‌ள் ச‌ந்‌தி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் போது மு‌த்த‌ம் கொடு‌த்து‌க் கொ‌ள்வ‌தி‌ல் எ‌ந்த தவறு‌ம் இ‌ல்லை. த‌ங்களு‌க்கு ‌திருமணமா‌கி‌வி‌ட்டது எ‌ன்று கூ‌றிய ‌பிறகு‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் நடவடி‌க்கை எடு‌த்தது அ‌தி‌ர்‌ச்‌சியாக உ‌ள்ளது எ‌ன்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளன‌ர்.

6.21.2010

காதலர்கள் கொலை அதிகரிப்பு : தடுக்க முடியாத மாநில அரசுகள்

இந்தியாவில் காதல் கொண்ட நெஞ்சங்கள் குற்றம் புரிந்ததாக, உறவுக்காரர்கள் கொலை செய்யும் எண்ணம் சமீபத்தில் அதிகரித்துள்ளதாக சுப்ரீம்கோர்ட் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து இதனை தடுப்பதில் என்ன சிரமம், ஏன் இது போன்ற சம்பவம் நடக்கிறது, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? என விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் அரியானா பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கிராமத்தினர் கண்எதிரே கொடூரம் : சமீபத்தில் அரியானா மாநிலத்தில் நிமிரிவாலி அருகே பிவானி என்ற கிராமத்தில் காதல் செய்தற்காக காதலன் , காதலிகள் பஞ்சாயத்து மூலம் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் .அரியானாவில் நடந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு: மோனிகா ( 18 ), ரிங்கு (19), மனம்ஒத்து காதல் செய்திருக்கின்றனர். இதனைக்கேள்விப்பட்ட மோனிகாவின் தந்தை, சகோதரன், மாமன், சேர்ந்து காதலன், காதலியை கொடுமைப்படுத்தினர். பின்னர் இருவரையும் அடித்தே கொன்றிருக்கின்றனர். காதலனை தூக்கில் தொங்க விட்டிருக்கிறார்கள். இது இந்த கிராம மக்கள் சிலர் பார்க்கும் அளவிற்கு அவர்கள் முன்னிலையில் கொன்றிருக்கின்றனர். யாராவது காதலித்தால் இவர்களுக்கு ஏற்பட்ட கதிதான் என கிராமத்தினரை எச்சரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்ட 4 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காதலன் ரிங்குவின் மாமனார் கிருஷ்ண குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் பிரேம்சிங் தெரிவித்தார். இவர் மேலும் கூறுகையில்; இருவரது உடல்களிலும் உள்ள காயத்தின் அடிப்படையில் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் . இன்னும் பிரேத பரிசோதனை வந்த பின்னர் முழு விவரம் தெரிந்து விடும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என்றார்.

இது போன்று பஞ்சாப், அரியானா, மேற்குவங்கம் . ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் காதல் கொடுமை சம்பவம் நடந்துள்ளதாகவும் , இது போன்ற கொடூரச்செயல்களை தடுக்க உரிய சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சக்திவாஹினி என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் தொடுத்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் காதலன், காதலிகளுக்கு பாதுகாப்பு மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைள் குறித்து விவரங்களை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.

6.20.2010

வீரப்பன் மகளுக்கு சீட்தர கல்லூரி நிர்வாகம் மறுப்பு

சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றார். இளைய மகள் பிரபா இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றார். சென்னை அயனாவரம் பெத்தேல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்ற வித்யாராணி 1,200க்கு 730 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

இவரது தங்கை பிரபா சேலம் வேதிகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் 902 மதிப்பெண்கள்பெற்றுள்ளார்.

இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கிய பிரபாவுக்கு கல்லூரியில் இடமில்லை என்று மறுத்துவிட்டது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.

சென்னை எஸ்.ஆர். எம். கல்லூரியில் பொறியியல் சீட் வாங்குவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஒருவர் பிராபாவை அழைத்து சென்றார்.

ஆனால் கல்லூரி நிர்வாகம் சீட் தரமுடியாது என்று மறுத்ததுடன், இனி இந்த பக்கமே வராதீர்கள் என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளது.