8.09.2012

பிறந்தநாள் கொண்டாட்டமாக குழந்தைகளை தத்தெடுத்தார் ஹன்சிகா

கொலிவுட் நடிகை ஹன்சிகா, தனது பிறந்த நாளான இன்று குழந்தைகள் இருவரை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்பு செலவுகளை கவனிக்க உள்ளார்.

கொலிவுட்டில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஹன்சிகா.

ஆரம்பத்தில் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற தற்போது கொலிவுட் நடிகைகளில் நட்சத்திர வரிசையில் ஹன்சிகாவும் உள்ளார்.

இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹன்சிகா, ஏதாவது சமூக அக்கறையுள்ள விடயத்தை செய்யவேண்டுமென நினைத்து குடிசை பகுதிகளில் வசிக்கும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.

இவர்களுக்கான படிப்பு, மருத்துவம், அன்றாட தேவைகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் இவரே கவனிக்க உள்ளார்.

இன்று மாலை தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டியும் தனது பிறந்தநாளை ஹன்சிகா கொண்டாட உள்ளார்.

11.23.2010

ஐ பாட் அந்தக் காலத்து சிலேட்டின் நவீன வடிவம்.

அடுத்த ஆண்டு 1500 – 2000 டேனிஸ் புத்தகங்கள் ஐ.பாட்டில் வருகின்றன..
உலகத்தின் வாசிப்புத் துறையில் பூமென ஒரு மாற்றம்..

டென்மார்க்கில் இப்போது ஐ.பாட் விற்பனைச் சந்தைக்கு வந்துவிட்டது. இதனுடைய வரவு எலக்ரோனிக் புத்தக வாசிப்பில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 80 அலமாரிகளில் அடுக்கி வைக்கப்படக்கூடிய நூல்களை ஓர் ஏ-5 அளவு ஐ.பாட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம். தற்போது டென்மார்க்கில் 7 வீதமான வாசகர்கள் எலக்ரோனிக் நூல்களை வாசிப்பவர்களாக இருக்கிறார்கள். ஐ.பாட் வரவு காரணமாக இந்தத் தொகை அடுத்த ஆண்டு 22 வீதமாக உயரப்போகிறது என்று கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விற்பனைக்கு வந்துள்ள அப்பிள் நிறுவனத்தின் ஐ.பாட் 5430 குறோணர்களுக்கு விற்கப்படுகிறது. மேலும் ஆறு மாதங்களில் இதன் விலை அரைப்பங்கு குறையலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நூல் நிலையத்தையே கையில் தூக்கிக் கொண்டு மனிதர்கள் உலாவரும் காட்சிகளை இப்போதே ஐ.பாட் பாவனையாளரிடம் காணமுடிகிறது. அக்காலத்தே உமாபதிசிவாச்சாரியார் என்பவர் ஒரு வண்டிலில் ஏட்டுச் சுவடிகளை ஏற்றியபடி வலம் வந்ததாகக் கூறுவார்கள். ஆனால் இன்றோ பல பாரவண்டிகளில் ஏற்றக்கூடிய புத்தகங்களை ஒரு ஐ.பாட்டில் சுமந்து செல்ல முடியும்.

மேலும் யாழ்ப்பாண நூல்நிலையத்தை எரித்து ஓர் இலட்சம் புத்தகங்களை சிங்கள இராணுவம் எரித்ததாகக் கூறுவோர் இனி இராணுவத்தால் எரிக்க முடியாத ஐ.பாட்டுக்;கள் வந்துவிட்ட செய்தியை கொண்டாடலாம். டென்மார்க்கின் பிரபல புத்தக விற்பனை நிறுவனங்கள் தாம் அச்சிட்ட நூல்களை எல்லாம் இப்போது உடனடியாக எலக்ரோனிக் புத்தகங்களாக மாற்றும் பணியில் குதித்துள்ளன. அடுத்த ஆண்டு 1500 முதல் 2000 புத்தகங்கள் எலக்ரோனிக் புத்தகங்களாக்கப்பட்டு ஐ.பாட் வாசகர்களுக்கு வருகிறது.

மக்கள் நூல்நிலையங்களுக்கு வராமலே நூல் நிலையங்களில் உள்ள நூல்களை ஐ.பாட் மூலம் வாசிப்பதும் மக்கள் தொகை எலக்ரோனிக் வாசிப்பிற்குள் பூம் என்று சரிவதும் தமக்கு பெரும் ஆச்சரியம் தரும் நிகழ்வாக இருப்பதாக கொப்பன்கேகன் நூல்நிலைய அதிகாரிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.


மேலும் புத்தகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்கும்போது 25 வீத வரி கட்ட வேண்டியிருந்தது, எலக்ரோனிக் புத்தக மயமாகும்போது அந்த வரி இல்லாமலே புத்தகங்களை ஐ.பாட் மூலம் ரொச் சிஸ்ரத்தில் படிக்கலாம். மேலும் அடுத்த ஆண்டு இறுதியில் டென்மார்க் பாடசாலைகளில் உள்ள கரும்பலகைகள் எல்லாம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் கணினித்திரைகள் கரும்பலகைகள் ஆகின்றன. அவற்றோடு இந்த ஐ.பாட்டும் இணையும்போது மாணவருக்கு கல்வி மிக நவீனமாக மாற்றமடையும். மேலும் பாடசாலை புத்தகங்களும் எலக்ரோனிக் வடிவமானால் மாணவர்கள் முதுகு முறிய புத்தகங்களை சுமாக்காமலே போக வாய்ப்புள்ளது.

தற்போது வெளிவந்துள்ள அதிசிறந்த அப்பிள் ஐ.பாட் பகலில் சிறிது தெளிவு குறைவாக இருக்கும். ஆனால் சிறிது இருட்டு இருந்தால் கத்திமுனைக் கூர்மை கொண்டதான படங்களும், வீடியோவும் கொண்டு காட்சி தருகிறது. உலகம் அதிவேகமான ஒரு பாய்ச்சலுக்குள் நுழைவதை ஐ.பாட்டின் வரவு காட்டுகிறது.

எவ்வளவுதான் எலக்ரோனிக் யுகம் வந்தாலும் புத்தகங்களில் இருந்து வாசிப்பது சுகம் என்று கூறுவோரும் பெருந்தொகையாக இருப்பதை மறுக்க இயலாது. ஆனால் புலம் பெயர் நாடுகளில் புத்தகங்களை அச்சடித்து சந்தைப்படுத்த முடியாத தமிழ் எழுத்தாளருக்கு உலகளாவிய சந்தையை ஐ.பாட் ஏற்படுத்தித் தரப்போகிறது. உலகம் இப்படியிருக்க பூசா முகாமிலும், புளியங்குளம் முகாமிலும் மக்களை அடைத்து வைத்துக் கொண்டும், பயங்கரவாதமென்றும் பக்கவாதமென்றும் கூச்சலிடும் சிறீலங்காவின் அவலத்தை நினைத்தால் ஐ.பாட்டும் ஒரு சொட்டு கண்ணீர்விடத்தான் செய்யும் என்றார் தமிழர் ஒருவர்.

11.21.2010

தூங்குவது எப்படி?

நிம்மதியாக தூங்குவது எப்படி?ன்னு புத்தகம் எழுதினீங்களே, புத்தக விற்பனை எப்படி?

வியாபாரம் படுத்துடுச்சு! எ‌ன் தூ‌க்கமே போ‌ச்சு..

10.26.2010

நான் அரசியல் பிரவேசம் செய்வது ஆண்டவன் கையில் உள்ளது-ரஜினிகாந்த்

என்னை இந்த உயரத்தில் தூக்கி வைத்த தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை தரும் விஷயத்தைச் செய்வேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அதேபோல தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சனிக்கிழமை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவில் அவர் இதைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு இயக்குநரும் தாங்கள் அறிமுகப்படுத்திய மாணவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தது போல அமைந்தது குரு கே.பாலச்சந்தர் – மாணவர் ரஜினி நேர்காணல் ஜடூஸ .

நிகழ்ச்சியை கே.பி இப்படி ஆரம்பித்தார்:

“ரஜினி இன்றைக்கு உலக சினிமாவுக்குப் போய்விட்டார். இந்திய சினிமாவின் உச்ச நடிகர். எவ்வளவோ வளர்ந்து விட்ட நிலையிலும் இன்றும் எனக்கு அவர் மாணவன்தான். என்னை எப்போதும் குருவாகவே மதிக்கிறார். அவரிடம் கேட்க ஏராளமான கேள்விகளை வைத்திருக்கிறேன். இந்த விழா மேடையில் கேட்டுவிடப் போகிறேன்… இந்த மேடையைப் பொறுத்தவரை என்னை குருன்னு நினைக்காம ஒரு பிரஸ்காரனா அவர் நெனச்சிக்க வேண்டியதுதான். அவருக்கு பதில் சொல்ல தயக்கமா இருக்கிற கேள்விகளுக்கு தாராளமா நோ கமெண்ட்ஸ்னு சொல்லிடலாம்…”

கேபியின் கேள்விகளும் ரஜினி தந்த பதில்களும்:

கேபி: எந்திரனுக்குப் பிறகுஇ நினைத்துப் பார்க்க முடியாத பெரிய உயரத்தில் நீ இருக்கிறாய். இப்போ மீண்டும் உன்னால் பழைய சிவாஜி ராவாக முடியுமா?

ரஜினி: நான் இன்னும் சிவாஜி ராவாகவே இருக்கிறதாலதான் ரஜினிகாந்த்தா இருக்க முடியுது. இந்த பேர்இ புகழெல்லாம் சிவாஜி ராவை பாதிக்கவில்லை!

கேபி: இன்னைக்கு உன்னால நினைச்சமாதிரி எங்கும் போக முடியாது. ஊரில் உள்ள சரவண பவனையெல்லாம் விலைக்கு வாங்கும் அளவுக்கு நீ இருந்தாலும்இ அதே ஹோட்டலில் போய் உன்னால உட்கார்ந்து சாப்பிட முடியாது. நடிகரான பிறகு நிறைய இழந்துட்டோமேங்கிற வருத்தம் உண்டா?

ரஜினி: சாதாரண மனிதர்களைப் போல எனக்கும் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை இழந்துவிட்டேன். சில நேரங்கள்ல நிம்மதியை இழந்திருக்கிறேன். சூழ்நிலை கைதியாக இருக்க வேண்டியும் உள்ளது. இவைகளை தியாகம் செய்துதான் இந்தப் புகழை அடைந்திருக்கிறேன்.

கேபி: உன்னோட வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதலாமே…?

ரஜினி: சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனசு கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் எனக்கும் வரும்போது எழுதுவேன்.

கேபி: உன்னை தூக்கி வைத்துள்ள சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறாய்?

ரஜினி: நிச்சயம் நல்லது செய்வேன். தமிழர்களும்இ தமிழ் சினிமாவும் பெருமைப் படுகிற மாதிரி ஒண்ணை நிச்சயம் செய்வேன் (விசில் – கைதட்டல் பறக்கிறது).

கேபி: இன்னிக்கு நீதான் இந்தியாவின் உச்ச நட்சத்திரம். வட இந்திய மீடியாவே சொல்லுது. டிவியில பார்த்தேன். இந்த நிலையை தக்க வைக்க என்ன பண்ணப் போறே?

ரஜினி: இதை எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்யல. அதனால காப்பாத்திக்கவும் முயற்சி பண்ணலை. நான் என் வேலையை செய்துட்டு இருக்கேன். இப்போ இருக்கிற நிலை ஒரு எந்திரனால மட்டும் வந்ததில்லை. அதுக்கு முன்ன நான் பண்ண நிறைய படங்களும் காரணம். அதேநேரம்இ இந்த நிலையை எப்படி தக்க வச்சிக்கப் போறோம்ங்கிற பயம் இருக்கத்தான் செய்யுது.

கேபி: சில்வர்ஸ்டர் ஸ்டெலோன் மாதிரி ஒரு ஒன்மேன் ஆர்மி நீ. உன்னோட பன்முகப் பரிமாணத்தைக் காட்டும் அளவு படம் எடுக்க இனி யாராலும் முடியாதுன்னு நினைக்கிறேன். நீயே ஏன் ஒரு படத்தை இயக்கக் கூடாது?

ரஜினி: படங்களை டைரக்டு செய்யற ஐடியா எதுவுமில்லை. அது எனக்குத் தெரியாதது. நிறைய பொறுப்புமிக்கது.

கேபி: ஒருவேளை நீ படம் டைரக்ட் பண்ணா என்னை உதவியாளரா சேர்த்துக்குவியா?

ரஜினி: நிச்சயம் உங்களை உட்கார வச்சி வணங்கிஇ நீங்க சொல்ற வேலையை செய்வேன்.

கே பி: இதுவரை எத்தனை படங்கள் நடிச்சிருப்பே?

ரஜினி: (சற்றும் யோசிக்காமல்) 154 படங்களில் நடித்துள்ளேன்.

கேபி: இந்தப் படங்களில் நாம நடிக்காம போயிட்டோமேன்னு நினைச்சுதுண்டா..?

ரஜினி: ஓரிரு படங்கள் உண்டு.

கேபி: என்னென்ன படங்கள்னு சொல்ல முடியுமா?

ரஜினி: இல்லே… இப்போ சொல்றது சரியா இருக்காது. நான் சொல்லவும் விரும்பல.

கேபி: வீரபாண்டிய கட்ட பொம்மன்இ எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் இப்போதும் பேசப்படுகிறது. அதுபோல் 50 ஆண்டுகளை தாண்டியும் நிற்கிற உன்னோட படங்கள்ன்னு எதைச் சொல்லுவே?

ரஜினி: ராகவேந்திராஇ பாட்ஷாஇ எந்திரன்.

கேபி: நீ மிகச் சிறந்த நடிகன். ஆனா தேசிய விருது கிடைக்கலேன்னு ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ஏக்கம் உண்டு. எப்போது தேசிய விருது பெறுவாய்?

ரஜினி: அது டைரக்டர் கையில் இருக்கு!

கேபி: நாடகங்களில் நடிக்கணும் என்ற ஆர்வம் உனக்கு உண்டு. நீயே பல முறை சொல்லியிருக்கே. இப்போது நாடகங்கள் போட்டால் நடிப்பியா?

ரஜினி: கண்டிப்பா நடிப்பேன்.

கேபி: மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை ஏப்ரல் 15-ந் தேதி போடப்போறேன். அதில் நடிப்பியா?

ரஜினி: நீங்க சொன்னாஇ நீங்க டைரக்ட் பண்ணாஇ நானும் நடிக்கிறேன்.

கேபி: சினிமாவுக்கு வந்த புதிதில் சிகரெட்டை தூக்கி போட்டு ஸ்டைல் காட்டினே. சிகரெட்டும் அதிகமா பிடிப்பே. இப்போ குறைச்சிட்டியா?

ரஜினி: சிகரெட் பிடிப்பதை இப்போது நிறையவே குறைச்சிட்டேன்.

கேபி: சரி.. நான் இயக்கிய படங்களில் உனக்குப் பிடிச்ச படங்கள் என்னென்ன?

ரஜினி: 2 படங்கள் ரொம்ப பிடிக்கும். ஒண்ணுஇ அவள் ஒரு தொடர்கதை. அதை 8 முறை பார்த்தேன். இன்னொன்னு அரங்கேற்றம். 12 தடவை பார்த்தேன்.

கேபி: அரசியலில் உனக்குப் பிடித்த தலைவர் யார்?

ரஜினி: லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கிய தலைவர்.

கேபி: வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப் பட்டிருக்கியா?

பதில்: இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப் பட்டிருக்கிறேன்.

கேபி: உனக்குப் பிடிச்ச இயக்குனர் ஜடூஸ யார்… தயங்காம சொல்லு!

ரஜினி: மகேந்திரன்.

கேபி: நீ விரும்பிச் சாப்பிடற உணவு ஜடூஸ எது?

ரஜினி: சிக்கன்.

கேபி: வாழ்க்கையில் நீ நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பது எல்லோருக்கும் தெரியும். உனக்கு நெருங்கிய நண்பர் யார்?

ரஜினி: ராவ்பகதூர்.

கேபி: என்கிட்டே உனக்குப் பிடிக்காத விஷயம் எது?

ரஜினி: நீங்கள் கோபப்படுவதைக் குறைச்சிக்கணும்!

கேபி: எல்லோரும் கேட்கணும்னு நினைக்கிற கேள்வி இது. நீ அரசியலுக்கு வருவியா மாட்டியா?

ரஜினி: அது அந்த ஆண்டவன் கையில் இருக்கு!

9.26.2010

டைட்டானிக் மூழ்கியதேன்? கப்பல் அதிகாரியின் பேத்தி தகவல்

டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளார் லூயிஸ்பேட்டன் என்பவர். இவர் தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத்து இந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதான் அந்த இரகசியம் :

“டைட்டானிக் கப்பலுக்கு முன்னால் பனிக்கட்டி மிதப்பதைக் கண்டுபிடித்து, கப்பலை இடது பக்கமாக திருப்பச் சொன்னார்கள். ஆனால் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பி விட்டார்கள்.

மேலும் திசை திருப்பும் கருவியும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால்தான் கப்பல் பனிக்கட்டியில் மூழ்கிவிட்டது” என்று அவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கு முன் பனிக்கட்டியில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் உயிர்காக்கும் படகு மூலம் தப்பித்துக் கொண்டனர்.

உயிர் தப்பியவர்களில் சார்ளஸ் மைட்டோலர் என்ற மூத்த கப்பல் அதிகாரியும் ஒருவர். இவருடைய பேத்தி தான் லூயிஸ்பேட்டன். இவர் டைட்டானிக் கப்பல் மூழ்கியது தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

அதில் டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார். தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத்தே இந்த இரகசியத்தை அவர் தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

7 நிமிடங்களில் மாரடைப்பைக் கண்டறியலாம் : மும்பை பேராசிரியர் தகவல்

நானோ தொழில்நுட்பத்தின் மூலம் 7 நிமிடங்களில் மாரடைப்பைக் கண்டறியலாம் என மும்பை ஐஐடி பேராசிரியர் ராம்கோபால் ராவ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் ‘நானோ எலக்ட்ரோனிக்ஸ்’ என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்திருந்த போதே பேராசிரியர் ராம்கோபால் ராவ் மேற்கண்ட தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் பெரும்பாலானோர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் உடனே சிகிச்சை அளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்.

தற்போதுள்ள கருவிகளை வைத்து நெஞ்சு வலி வந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதா என்பதை அறிய 4 மணி நேரம் ஆகிறது.

ஆனால் ‘நானோ’ தொழில்நுட்பத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட சிறிய ‘சிப்பை’ப் பொருத்திய கருவி மூலம் 7 நிமிடங்களில் மாரடைப்பை கண்டறிந்து விடலாம். மும்பை ஐஐடி உதவியுடன் இக்கருவியை நாம் வடிவமைத்துள்ளோம்.

தற்போது இது சோதனை முறையில் உள்ளது. விரைவில் அரசு அனுமதியோடு அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இக்கருவிப் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கருவிக்கு ‘ஐசென்ஸ்’ எனப் பெயர் வைத்துள்ளோம். இதன் விலை ரூ.10 ஆயிரத்து மேல் இருக்காது. கருவியைத் தயாரிக்க தனி நிறுவனம் தொடங்கப்படும்.

மத்திய அரசு நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நாட்டில் 5 இடங்களில் தலா ரூ.50 கோடி செலவில் நானோ தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும். முதன்முறையாக மும்பை ஐஐடியில் அமைக்கப்பட்டுள்ள மையத்துக்கு இதுவரை 35 ஆராய்ச்சித் திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை சமர்ப்பிப்போருக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் ஐஐடி ஏற்கிறது” என்றார்.

8.20.2010

படித்துச் சுவைக்க வேண்டிய நல்ல தகவல்கள்!

எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான்.

ஆசை

கடினமாக உழைப்பதற்குரிய முயற்சியை ஒருவர் எப்போது உத்வேகப்படுத்துகிறார்? ஒரே ஒரு வார்த்தையில் இதற்கு பதிலைச் சொல்லிவிடலாம் – “ஆசை”.

நாயை பற்றிய ஒரு கதை. ஒரு நாய் தன்னால் மிகவும் வேகமாக ஓட முடியும் என்று எப்போது பார்த்தாலும் பெருமை பேசிக் கொண்டிருந்தது. ஒரு நாள் முயலை துரத்திக் கொண்டு ஓடிய அந்த நாயால் முயலைப் பிடிக்க முடியவில்லை. மற்ற நாய்கள் அதைப்பார்த்து கேலி செய்தன. ஆனால் அந்த நாய் இவ்வாறு சொல்லியது…..

“ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். முயல் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியது. ஆனால் நான் வேடிக்கைக்காகத்தான் அதை விரட்டிக் கொண்டு ஓடினேன்”. முயலைப் பிடிப்பது எனக்கு ஒரு முக்கியமான விஷயமாக தோன்றவில்லை.

ஆனால் முயலைப் பொறுத்தவரையில் இது வாழ்வா! சாவா!! என்றதொரு போராட்டம். நாயை விட கடுமையாக முயற்சித்தது. வாழ்க்கை அதற்கு மிகவும் முக்கியமான விஷயம். ஒரே வார்த்தையில் மிகவும் சுருக்கமாகச் சொல்லிவிடலாம் வாழ வேண்டும் என்றதொரு “ஆசை”.

மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவரான வில்லியம் ஜேம்ஸ் இதனை கீழ்கண்டவாறு கூறுகிறார். “விளைவைப் பற்றி நீங்கள் போதுமான அக்கறை காட்டினால் அநேகமாக நிச்சயமாக நீங்கள் அதைப் பெற்று விடுவீர்கள். நல்லவராக இருக்க விரும்பினால் நல்லவராக இருப்பீர்கள். நீங்கள் அடைய வேண்டிய விஷயங்களை உண்மையாகவே அடைய ஆசைப்பட வேண்டும் என்பது மட்டும் தான் முக்கியம்”.

“ஒரு விஷயம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் நீங்கள் செய்கின்ற முயற்சியின் உத்வேகமும் இருக்கும்”.

நீங்கள் விரும்புவதை அடைவதற்கு ஒரு இரகசியம் இருக்கிறது:

நீங்கள் போதுமான அக்கறைகாட்ட வேண்டும்

மெய்யாகவே விரும்ப வேண்டும்

ஆசை இருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனதில் இந்த ஆசை கொழுந்துவிட்டு எரிய வேண்டும் உங்கள் எண்ணங்களின் மீதும் செயல்களின் மீதும் அதற்குப் பெரிய பாதிப்பு இருக்க வேண்டும்
மேலும் அதை அடைந்தே தீர வேண்டும் என்பது உங்கள் நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற வேண்டும்
அந்த அளவுக்கு அது உங்களுக்கு உங்களது வாழ்க்கையில் முக்கியமானதாக இருக்க வேண்டும்.

“அத்தனைக்கும் ஆசைப்படு – ரஜனீஷ்(ஓஷோ)”

—————————————————————

கடின உழைப்பு

எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் அதிகமாகக் கவலைப்பட்ட போது அவனுடைய அதைரியமும் அதிகமாயிற்று. முடிவில் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தான்.

தன்னுடைய இந்த முடிவு தன்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியக்கூடாது என்று அவன் விரும்பினான். கட்டடத்தைச் சுற்றி சுற்றி ஓடி இயற்கையான மாரடைப்பை உண்டாக்கி மரணம் அடைய வேண்டும் என்று எண்ணினான்.

ஆகவே ஓட ஆரம்பித்தான். ஓடிக் கொண்டே இருந்தான். அதிகமாக ஓட ஓட அவனுடைய களைப்பும் அதிகமாயிற்று. களைப்பு மிகுதியாகவே களைப்பைத் தவிர வேறு எதையும் அவனால் உணர முடியிவில்லை. படுக்கைக்குச் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் அவனால் எண்ண முடிந்தது. படுக்கையில் படுத்து உறங்கிப் போனான். பன்னிரண்டு மணி நேரம் கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கழித்தான். எழுந்த போது புத்துணர்ச்சியுடன் இருந்தான். எந்தப் பிரச்சனையும் சந்திக்க முடியும் என்கிற ஆர்வம் தன்னுள் தோன்றி இருப்பதையும் உணர்ந்தான்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல் வரிகளில் ஒன்று

“வேலையற்ற வீணர்களின் மூலையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே”!!!

——————————————————

சுதந்திரம்

உலக நாடுகளில் விடுதலைப் போர் நடத்திய எல்லாத் தலைவர்களும் கத்திஇ துப்பாக்கிஇ பீரங்கிஇ கப்பல் விமானம் என்பதை நம்பிப் போராடினார்கள். குஜராத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஒற்றை மனிதர் மட்டும் எந்த ஆயுதமும் இல்லாமல் போர்க்களத்தில் புகுந்தார். “இந்த நாடு எங்களுடையது. உம்முடையதுஅல்ல…” என்ற ஒற்றை உண்மையை பிரிட்டிஷார் முன் வைத்துப் போராடினார். அந்த சத்தியத்தின் முன் எல்லா ஆயுதங்களும் கூர்மழுங்கிப் போயின. யார் அவர்? – சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணல் காந்தியடிகள்.

“நிராயுதபாணியில் நின்று போராடும் ஒற்றை மனிதனின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்காரர்களால் ஏன் நசுக்க முடியவில்லை?” என்று எதிர்கட்சிகள் பாய்ந்த போது சர்ச்சில் சொன்ன பதில் ஆழமானது. “அந்த மனிதன் கத்தியைய் எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியைத் தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கி எடுத்துப் போராடினால் நான் குண்டு மழை பொழிந்து அழித்திருப்பேன். அவர் சத்தியத்தை அல்லவா கையில் எடுத்துக் கொண்டு போராடுகிறார். சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதை நண்பருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்றார் சர்ச்சில்.

எதிரியையும் அன்பால் அஹிம்சையால் சத்தியத்தால் பணியவைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தது. உலகம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உலகத்தைப் பாதித்த நூறு போர் என்ற பட்டியலில் எழுதினால் அதில் மகாத்மா காந்தியும் ஒருவர். உலக வரலாறு அவரை ஒருபோதும் ஒதுக்காது.

இதற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்வில் நடந்த மற்றுமொரு உதாரணம் ஒரு நாள் காந்தி தனது கிராமத்தில் பிரார்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு முஸ்லீம் மனிதர் காந்தியின் தொண்டையை பிடித்தார். பிடித்த உடனேயே காந்தி குலைந்துபோய் தளதளர்த்து கீழே விழுந்தார். கீழே விழுகின்ற அந்த தருணத்தில் தனது மெல்லிய குரலில் குர்ஆனில் இருந்து சில வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகளை கேட்டவுடனேயே அந்த முஸ்லீம் மனிதர் இவ்வாறு கூறினார். “மன்னிக்கவும். தங்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்தேன்”. தங்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய வேண்டும்? என்று வினவினார். அதற்கு காந்தி இவ்வாறு பதில் கூறினார்.

“ஒன்றே ஒன்றை மட்டும் எனக்காகச் செய் நீ என்னிடம் என்ன செய்ய முயற்சித்தாயோ அதை யரிடமும் சொல்லாதே.

இல்லையென்றால் இதுவே இந்து-முஸ்லீம் மதக் கலவரத்திற்கு காரணமாக அமையும்”.

“என்னை மறந்துவிடு! உன்னை மன்னித்துவிடு!!”

——————————————————————————————

ஊனம் தடையில்லை

நமது உடலில் இருக்கின்ற குறைகள் நமது சாதனைகளுக்கு முட்டுக்கட்டைகள் கிடையாது. சாதிக்கத் துடிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இந்த ஊனமே ஒரு தூண்டுகோலாக அமைந்துள்ளன. உதாரணமாகஇ இந்த உலகில் ஏதாவது ஒரு குறையுடன் பிறந்து தங்களின் சாதனைகளுக்கு என்றும் ‘சாவில்லை’ என்று நிலைநாட்டியவர்கள் ஏராளம். உதாரணமாக

சாண்டோ எனபவர் பலகீனமான நோயாளியாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினார். சாண்டோ எவரிடமிருந்தும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. அவர் விரும்பியது பலம்! மன உறுதியுடன் தேகப் பயிற்சி செய்து உடல் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார். அவர் காலத்தில் ‘மிகவும் பலசாலி’ என்ற பெயரையும் பெற்றார்.

உடல் ஊனமுற்ற பலகீனமான உடலை உடைய ஜார்ஜ் ஜோவெட் என்கிற சிறுவன் தன்னுடைய நிலையை எண்ணி ஒரு போதும் வருந்தவில்லை. மற்றவர்கள் தனக்காக வருத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கவும் இல்லை. தன்னுடைய மனதையும் உடலையும் மேலும் மேலும் வளப்படுத்திக் கொண்டான். என்ன நடந்தது? அடுத்து பத்து ஆண்டுகளில் ‘செயலுக்கு ஏற்ற விளைவு’ என்ற இயற்கைவிதி செயல்பட்டது. உலகத்தின் ‘மிகச்சிறந்த பலசாலி’ என்கிற பெயரைப் பெற்றார்.
ஆனெட் கெல்லர்மேன் – உடல் ஊனமுற்ற நோயாளிப் பெண். முழுஉடலை அவள் விரும்பினாள். பயிற்சி சிகிச்சை ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு மன உறுதியுடன் முழுமையான உடலை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். உலகத்தில் உள்ள முழுமையான உடலைப் பெற்ற ஒருத்தியாக தேர்வு செய்யப்பட்டாள். நீரில் ‘டைவ்’ செய்கின்ற உலகச் சாம்பியன் பட்டத்தையும் அவள் வென்றாள்.
பீதோவன் சாகாவரம் பெற்ற ராகங்களை செவிடாக இருந்த நிலையில் தான் உருவாக்கினார்.
கவிஞர் மில்டன் – ‘சொர்க்கம் இழுக்கப்படல்’ என்கிற காவியத்தை பார்வையற்ற நிலையில் தான் எழுதி முடித்தார்.

ஃபிராங்க்ளின் ரூஸ் வெஸ்ட் – இளம்பிள்ளை வாதத்தால் கால் ஊனமுற்ற நிலையிலும் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார்.

ராபர்ட் லூயி ஸ் ஸ்டீபென்சன் – ஒரு மணி நேரம் கூட இருமலில் இருந்தும் நெஞ்சு வலியில் இருந்தும் விடுபட்டது இல்லை. அந்த நிலையிலும் ‘புதையல் தீவு’ போன்ற அருமையான கதைகளை எழுதி படைத்தார்.

எடிசன் தன்னுடைய பரிசோதனைகளில் காட்டியதைப் போல நாமும் தொடர்ந்து முயற்சியில் உறுதியினைக் காட்டுவோம். பல தோல்விகளுக்குப் பிறகுதான் சரியானது என்ற தீர்வைக் கண்டுபிடிக்க முடிகிறது.

இவர்கள் யாவரும் குறைபாடுகள் உடையவர்கள் அல்ல. தங்களின் குறைபாடுகளை ஈடுசெய்ய மிக உயர்ந்த கோட்ப்பாடுகளை உருவாக்கிக் கொண்டார்கள். அதை தங்களின் வாழ்க்கையில் பிரதிபலித்திடவும் செய்தனர்.

“முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை”.

———————————————————

வாழ்க்கை

“வாழ்க்கை என்கிற கடிகாரத்திற்கு ஒரு முறைதான் சாவி கொடுக்கப்படுகிறது. அந்த கடிகாரத்தின் முட்கள் சீக்கரமே நின்று போகுமோ அல்லது அதிக காலம் கழித்து நின்று போகுமோ என்பதை எவருமே அறிய முடியாது”. இப்போது இருக்கின்ற காலம் தான் உங்களுக்குச் சொந்தமானது.

மன உறுதியோடு வாழ்க்கை நடத்துங்கள்!

பிறரிடம் அன்பு செலுத்துங்கள்!!

உழைத்துக் கொண்டிருங்கள்!!!

நாளைய தினத்திடம் நம்பிக்கை வைக்காதீர்கள்.

ஒரு வேளை நாளைக்குக் கடிகாரம் நின்று போய்விடலாம்.
நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடியம். ஆனால் வாழ்க்கையின் மற்ற பரிமாணங்களை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அதனுடைய ஆழம் அகலம் மற்றும் உயரம் ஆகியவை உங்களுடைய கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையே. இந்த பரிமாணங்களுக்குள் வாழ்க்கை என்கிற அதிசயத்தை நீங்கள் வாழ முடியும். திரும்பவும் நிகழ முடியாத அதிசயம் இது.

————————————————————————

பிரச்சனை


“பிரச்சனையில் இருந்து தப்பித்து போவதற்கு எவ்வளவு சக்தி தேவைப்படுகிறதோ அதே அளவு சக்திதான் பிரச்சனையை புரிந்துகொண்டு வெற்றி கொள்ளுவதற்கும் தேவையாக இருக்கிறது”. பிரச்சனையில் இருந்து தப்பித்துப்போக முயன்றால் அது உங்களை தொடர்ந்துவந்து கொண்டே இருக்கும். பிரச்சனையை புரிந்து கொண்டு நீங்கள் தீர்க்க முயலும் போதுஇ அது உங்களை விட்டு முற்றிலுமாக நீங்கி விடும்.

பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்குமாதலால் அவற்றை அவ்வப்போதே தீர்த்து விடுவது அவசியம். இல்லாவிட்டால் அவை ஒன்று சேர்ந்து சுமையாகி உங்களை அழுத்தத் தொடங்கும். தீர்க்க முடியாத பிரச்சனைகளால்தான் உலகத்தில் பல ஆண்களும் பெண்களும் மன அளவிலும் உடல் அளவிலும் சோர்வுற்று முறிந்து போகிறார்கள்.

எந்த அளவிற்கு ஒருவன் பிரச்சனையி்ன் யதார்த்தத்தை நேர்முகமாகச் சந்திக்கிறானோ அந்த அளவுக்கு அவன் பலசாலியாக வெளிப்படுகிறான். அதே சமயம் எந்த அளவுக்கு பிரச்சனையில் இருந்து தப்பி ஓட முயல்கிறானோ அந்த அளவுக்கு வாழ்க்கையினையும் சிக்கலாக்கிக் கொள்கிறான். பிரச்சனையை நேரடியாகச் சந்தித்து அதன் மையப்பகுதியில் நுழைந்து அதன் தன்மையினைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்ற போது நீங்கள் பலம் பெறுவதோடு அதைச் சமாளிக்கின்ற திறமையினையும் பெற்று விடுகிறீர்கள்.

மதியுண்டு கற்புடைய மனைவியுண்டு

வலிமையுண்டு வெற்றிதரும் வருந்திடாதே!
எதிர்த்து வரும் துன்பத்தை மதிக்கும் தன்மை
எய்திவிட்டால் காண்பதெல்லாம் இன்பமடா!!

“பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தான் மகிழ்ச்சியே இருக்கிறது”.

8.10.2010

செல்பேசி மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு அளவு அதிகரித்தால் அபராதம்.


செல்பேசி நிறுவனங்கள் அமைக்கும் தொலைத் தொடர்பு கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு (Electro Magnetic Radiation - EMR) நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறினால் ஒரு கோபுரத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் தகவல் தொடர்பு மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு அளவு எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு கோபுரத்திற்கும் அளிக்கப்பட்ட சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த அளவை மீறக் கூடாது என்று தகவல் தொடர்புத் துறை துணை அமைச்சர் சச்சின் பைலட் கூறியுள்ளார்.

கதிர்வீச்சு தொடர்பான பன்னாட்டு பாதுகாப்பு அமைப்பு செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு அளவை எல்லா செல்பேசி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறிய அமைச்சர் சச்சின் பைலட், ஒவ்வொரு தகவல் ஒலிப்பரப்பு கோபுரமும் (Base Trans-receiver Station - BTS) எந்த அளவிற்கு மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு வெளியாக்குகிறது என்பது தொடர்பான சான்றிதழ் பெற்று, அதனை தொலைத் தொடர்புத் துறையின் கண்காணிப்பு பிரிவிற்கு அளித்திட வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் ஒவ்வொரு தொலைத் தொடர்பு கோபுரமும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு அந்த கோபுரங்களில் இருந்து மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு வெளியாகிறதா என்பது உறுதிசெய்யப்படும் என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு செல்பேசி தொலைத் தொடர்பு கோபுரமும் வெளியிடும் கதிர் வீச்சு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமானால், கோபுரத்திற்கு ரூ.5 லட்சம் அபாரம் விதிக்கப்படும் என்று கூறிய அமைச்சர் பைலட், இது குறித்து உறுப்பினர்கள் பெரிதாக அச்சப்பட வேண்டாம் என்றும், அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளியாகும் மின்காந்த ஒலிக் கதிர் வீச்சிற்கும் புற்று நோயை உண்டாக்கும் கட்டிகள் உருவாவதற்கும் தொடர்பு உள்ளது என்று கூறியுள்ள உலக பொது நல அமைப்பு (WHO), அடுத்த 20 ஆண்டுகளில் உடல் நலத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மின்காந்த ஒலிக்கதிர் வீச்சு இருக்கும் என்று எச்சரித்துள்ளதை அமைச்சர் பைலட் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல செல்பேசி நிறுவனங்கள் தங்களின் சேவை 'சிறந்ததாக விளங்க' இந்த மின்காந்த ஒலிக்கதிர் வீச்சை அதிகப்படுத்துகின்றன என்றும், அதன் காரணமாகவே செல்பேசிகளை நீண்ட நேரம் பயன்படுத்துவோருக்கு காதைச் சுற்றி மறத்துவிட்டது போன்று உணர்வதாகவும் கூறுகின்றனர். இது தொடர்பான எச்சரிக்கைகள் குறுஞ்செய்தி மூலம் உலா வந்ததும் குறிப்பிடத்தக்கது.

த்ரிஷாவை தேர்வு செய்த சல்மான்

சல்மான் கானின் பேவரைட் நடிகையாக இருக்கிறார் அசின். லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்கு பின் ரெடி படத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்யுமாறு தயாரிப்பாளருக்கு சல்மான் உத்தரவிட்டார். இப்போது ரெடியில் அசின் நடித்து வருகிறார். இதையடுத்து சாஜித் நதியாத்வாலா தயாரிக்கும் படத்துக்கும் அசினின் பெயரையே சல்மான் சிபாரிசு செய்தார். ஆனால் ரெடியில் அசின் நடிப்பதால் இதில் வேண்டாம் என தயாரிப்பாளர் சொல்லியிருக்கிறார். இதற்கு ஒப்புக்கொண்ட சல்மான், வேறு ஹீரோயினை பார்க்குமாறும் புதுமுகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்கிறார். சரி என கிளம்பிய தயாரிப்பு, ஒரே வாரத்தில் சல்மானிடம் திரும்பி வந்தார். படாத பாடு பட்டு, பல புதுமுகங்களின் போட்டோ ஆல்பங்களை சல்மான் முன் குவித்துவிட்டார்.

இதில் ஒருவரை தேர்வு செய்யுங்கள் என தயாரிப்பாளர் சாஜஞித் கூற, இதில் யாரும் வேண்டாம். நான் ஹீரோயினை தேர்வு செய்துவிட்டேன் என்றாராம் சல்மான். நொந்துபோன சாஜித், யார்? என கேட்க, சட்டென சல்மானிடமிருந்து வந்த பதில், த்ரிஷா. பிரியதர்ஷன் இயக்கத்தில் கட்டா மிட்டா மூலம் இந்தியில் அறிமுகமானார் த்ரிஷா. இப்படம் ஓடவில்லை. படத்தை தயாரித்த அக்ஷய் குமார், தனது நிறுவனத்தின் அடுத்த இரு படங்களுக்கும் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருந்தார். கட்டா மிட்டா ஓடாததால் அடுத்த படங்களை பற்றி இப்போது அக்ஷய் பேசுவதே இல்லையாம். இதனால் த்ரிஷா அப்செட்டில் இருக்கிறார். த்ரிஷா எனக்கு குழந்தை மாதிரி என சொன்னவர் பிரியதர்ஷன். அதனால் த்ரிஷாவின் பெயரை தனது இன்னொரு நண்பரான சல்மான் கானிடம் சிபாரிசு செய்தாராம் பிரியதர்ஷன். இதையடுத்துதான் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைதஙிதிருப்பதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது

சீனாவில் கடற்கன்னி சிலை 30 இலட்சம்பேர் பார்த்தனர்

டென்மார்க்கின் புகழ் பெற்ற நினைவுச் சின்னமான கடற்கன்னி சிலையின் கழுத்தை அவ்வப்போது பெண் உரிமைவாதிகள் அறுத்தெறிந்தாலும் சீனாவில் அதன் புகழ் அதிகரித்து வருகிறது. தற்போது சீனாவின் தென்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கடற்கன்னி சிலையை இதுவரை 30 இலட்சம்பேர் பார்வையிட்டுள்ளதாகவும், கடற்கன்னியை பார்வையிடும் ஆவல் சீனாவில் பெருகி வருவதாகவும் சீன செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் எக்ஸ்போ 2010 கடந்த ஏப்ரல் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இத்தொகை கணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சீனா எக்ஸ்போ 2010 ல் டென்மார்க்கின் கண்காட்சிகள் பெரு வெற்றிபெற கடற்கன்னியும் துணையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை மேலை நாடுகள் தவிர மற்றய நாடுகளில் இருந்து டென்மார்க் வருவோரை தடுக்க வேண்டுமென்று பிரேரணை கொண்டு வரும் டேனிஸ் மக்கள் கட்சி இந்த விவகாரத்தை மனதில் கொண்டால் இப்படியான பிரேரணைகளை கொடுண்டு வருமா என்பதும் சிந்தையைத் தூண்டும் கேள்வியாகும்.