6.21.2010

காதலர்களை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்

அரியானாவில் குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றுவது என்ற பெயரில், இளம் காதலர்களை பெண் வீட்டார் அடித்துக் கொன்று தூக்கில் தொங்க விட்டனர்.அரியானாவில் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது கிராமங்களில் குற்றமாக கருதப்படுகிறது. இதுபோன்ற திருமணங்களுக்கு கிராம பஞ்சாயத்துக்களில் கடும் தண்டனை விதிக்கப்படுகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட காதலர்களின் வீட்டாரே காதலர்களை கொல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின் றன.அரியானாவில் இதேபோன்ற சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. அரியானா மாநிலம் பிவானி அருகே ட்ரோபவுட் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் மோனிகா (18). அருகே உள்ள மேன்ஹரு என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ரிங்கு (19). இருவரும் ஜாட் இனத்தின் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு இருவரின் குடும்பங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதையும் மீறி காதலர்களின் சந்திப்பு தொடர்ந்தது.இந்நிலையில், மோனிகாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ரகசியமாக சந்திக்க வந்த ரிங்குவை மோனிகாவின் வீட்டார் பிடித்தனர். பின்னர், மோனிகாவின் வீட்டில் வைத்து இருவரையும் அடித்தே கொன்றனர். உடல்களை வீட்டிலேயே தூக்கில் தொங்க விட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி பிரேம் சிங் கூறுகையில், ÔÔபிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். கொல்லப்பட்ட இருவரது உடல்களிலும் பலத்த காயங்கள் உள்ளன. மோனிகாவின் தந்தை, சகோதாரர், ஒன்று விட்ட சகோதரர்கள், மாமா ஆகியோர் இந்தக் கொலைகளை செய்துள்ளதாக தெரிகிறது. ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த காதலர்களுக்கு இதுதான் கதி என்பதை உணர்த்துவதற்காக வீட்டில் உடல்களை தூக்கில் தொங்க விட்டுள்ளனர். தலைமறைவான அவர்களை பிடிக்க போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

1 comments:

  1. kodumai...

    உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
    தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
    http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html

    ReplyDelete