6.21.2010

சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி

சுவீடன் நாட்டின் மன்னர் கார்ல் 16-வது கஸ்டாப் (64), ராணி சில்வியா (66) ஆகியோரின் மூத்த மகள் விக்டோரியா (32). இவர் டேனியல் வெஸ்ட்லிங் (36) என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

டேனியல் ஒரு சாதாரண குடிமகன் ஆவார். உடற்பயிற்சி கற்றுத்தரும் பயிற்சியாளர். இவர் இளவரசி விக்டோரியாவுக்கு உடற்பயிற்சி கலையை கற்றுத்தர நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இதற்கு முதலில் எதிர்ப்பு கிளம்பியது.

இவர்கள் திருமணத்துக்கு இளவரசி விக்டோரியாவின் பெற்றொர் திடீரென சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டாக் ஹோமில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு திருமணம் நடந்தது.

இதில், இளவரசி விக்டோரியாவின் பெற்றொர், அவரது சகோதரிகள் கார்ல் பிலிப் (31), மாடலின் (28) மற்றும் நார்வே, டென்மார்க் நாடுகளின் இளவரசர்கள் மற்றும் இளவரசிகள் கலந்து கொண்டனர்.

சாதாரண குடிமகனை திருமணம் செய்து கொண்ட விக்டோரியா அடுத்து முடிசூட போகும் பட்டத்து இளவரசி ஆவார்.

0 comments:

Post a Comment