11.21.2012

முஸ்லிம்களை மோசமாக சித்தரிக்கும் விஸ்வரூபம்! சர்ச்சையில் சிக்கியுள்ள கமல் வைத்தியசாலையில் அனுமதி

முஸ்லிம் சமூகத்தை மோசமாக சித்தரிக்கும் ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளால் கமலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுப்புது தொழில் நுட்பங்களோடு விஸ்வரூபம் படத்தை இயக்கி, தயாரித்துள்ள கமல், அதனை வெளியிடுவதில் சிக்கலை எதிர் கொண்டுள்ளார்.
தலிபான் போராளிககளும் தலிபான்- அமெரிக்காவுக்கு இடையே நடந்த ஆப்கான் போரும் கதையின் மையமாகியிருப்பதால் முஸ்லிம்களை கமல் மோசமானவர்களாக சித்தரித்திருக்கிறார் – அவரது இப்படத்தில் இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இஸ்லாமிய அறிஞர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் “விஸ்வரூபம்´ படத்தை போட்டுக் காட்ட வேண்டும். அதில் ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பது தெரிய வந்தால் அதை நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தினால் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலால் கமலுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

ஆனால் அது வதந்தி என்றும் கமல் மிகுந்த ஆரோக்கியத்துடன் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தின் பிரிமியர் ஷோவை அமெரிக்காவில் வெளியிடும் வேலைகளிலும் ஹாலிவுட்டில் படம் பண்ணுவது பற்றிய முன்னோட்டத்திலும் பிஸியாக இருப்பதாகவும் கமல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




0 comments:

Post a Comment