6.25.2010

83 வயது தந்தையை கவாநிக்கத மகன் சிறையில் அடைப்பு

83 வயது தந்தையின் பராமரிப்பு செலவுகளுக்கு பணம் கொடுக்காமல் அவரை தவிக்கவிட்டதாக அவரது மகனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை அயனாவரத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

சென்னை படாளம் டிம்ளஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (83). இவருக்கு குமார், சேகர், கமலக்கண்ணன் ஆகிய மகன்களும், பத்மினி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இவர்களில், சேகர், கமலக்கண்ணன் ஆகியோர் மட்டும் முத்துகிருஷ்ணனுக்கு உணவு உள்ளிட்ட செலவுகளுறுக்கு பணம் வழங்கி வருகின்றனராம். இதே பகுதியில் வேறு வீட்டில் வசிக்கும் மூத்த மகன் குமார் தந்தையின் உணவு செலவுக்கு பணம் அளிக்க மறுத்து வந்தாராம்.

பணம் கேட்டு குமாரிடம் பலமுறை முத்துகிருஷ்ணன் முறையிட்டாராம். ஆனாலும், அவரிடம் இருந்து எவ்வித உதவியும் கிடைக்கவில்லையாம்.

இந்நிலையில் குமார் மீது முத்துகிருஷ்ணன் அயனாவரம் காவல் நிலையத்தில் கடந்த 23ஆம் தேதி புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர், மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்புக்கான சட்டம் 2007ன்படி வழக்குப் பதிவு செய்து குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மூத்த குடிமக்கள் பாதுகாப்புக்காக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் சென்னையில் நடைபெற்றுள்ள முதலாவது கைது இது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment