ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் நேற்று நடந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி முன்னேறியது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றத்த பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது . தொடக்க ஆட்டக்காரர்கள் சல்மான் பட்டும், இம்ரான் பர்ஹத்தும் நிதானமாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் பர்ஹத் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சோயிப் மாலிக்கும், சல்மான்பட்டு ஆகியோர் சிறப்பான இலக்கை நோக்கி துடுப்பாடினர் .
144 ஓட்டங்கள் (28.5 ஓவர்) எடுத்திருந்ததை பார்த்த போது பாகிஸ்தான் 290 ரன்களை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 4 ஓவர்களில் மாலிக் (39 ஓட்டங்கள்) சல்மான் பட் (74 ஓட்டங்கள், 85 பந்து, 9 பவுண்டரி), உமர் அமின் (5 ஓட்டங்கள்) ஆகியோர் வெளியேறியதால் பாகிஸ்தான் ஓட்ட வேகம் குறைந்தது. 49.3 ஓவர்களில் 267 ரஓட்டங்களை மட்டுமே பெற்றது பாகிஸ்தான் அணி. அடுத்து 268 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கம்பீரும், ஷேவாக்கும், பாகிஸ்தான் வேக கூட்டணி அக்தர்-ஆமிர் பந்து வீச்சில் தொடக்கத்தில் திணறினார்கள்.
இதை தொடர்ந்து கம்பீருடன், கேப்டன் டோனி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு உயர்த்தினர். அபாரமாக ஆடிய கம்பீர் அரைசதத்தை கடந்தார்., . இந்திய அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 271 ஓட்டங்களை குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.
0 comments:
Post a Comment