தமிழ் நாட்டின் பிரபலமான நடிகை ஸ்ரேயா இப்போது தமிழ்ப் படங்களில் பெரிதாக இல்லை. சிக்கு புக்கு, ரவுத்திரம் என்று அவர் நடிக்கும் எல்லாப் படங்களும் தயாரிப்பு நிலையிலேயே உள்ளன.ஆனாலும் அவரைப் பற்றிய கிசுகிசுகளுக்கு பஞ்சமில்லை. ரவுத்திரம் படம் ட்ராப், தெலுங்கில் ஒரு பாடலுக்கு நடனம், திருமண கிசுகிசு என அனைத்துக்கும் அலட்டாமல் பதில் வருகிறது இந்த கவர்ச்சி இளவரசியிடமிருந்து, தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் புலி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறீர்கள். தொடர்ந்து ஒரு பாடலுக்கு ஆடுவீர்களா? பெரிய படம், திறமையான இயக்குனர், எல்லாவற்றுக்கும் மேலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்பதால் புலியில் ஒரு பாடலுக்கு ஆட ஒத்துக் கொண்டேன். இதுபோல் பெரிய வாய்ப்புகள் வந்தால் மட்டும் ஆடுவது பற்றி யோசிப்பேன். ஆனால் தமிழில் ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன்.
ஏன் தமிழுக்கு மட்டும் பாரபட்சம்…?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நடித்தாலும் தெலுங்கை விட தமிழுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதனால்தான் ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் என்றேன்.
சிக்கு புக்கு படத்தில் நீங்கள் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராமே?
இந்தப் படத்தின் கதை என்னையும், ஆர்யாவையும் சுற்றிதான் நடக்கும். நான்தான் படத்தின் ஹீரோயின். அம்ரிதா ராவின் தங்கை பிரீத்தி இந்தப் படத்தில் கவுர வேடத்தில் நடிக்கிறார். இதைத்தான் சிலர் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் எனக்கு ஜாலியான கேரக்டர். ரொம்பப் பிடித்து நடித்து வருகிறேன். ரசிகர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.
ரவுத்திரம் படம் என்னவானது?
நான் ஜீவா ஜோடியாக நடிக்கும் படம் இது. படம் ட்ராப் என்று வந்த செய்தியை நானும் படித்தேன். அது தவறு. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அதில் நான் கலந்து கொள்ளவில்லை. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது. அதில் நானும் கலந்து கொள்கிறேன்.
உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானதே?
திருமணத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் இதுவரை திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. எனக்கு தகுதியானவரை நான் சந்திக்கும் போது நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன்.
வாட்ஸ் குக்கிங் படத்துக்குப் பிறகு இந்திக்கு அதிக முக்கியத்துவம் நீங்கள் கொடுப்பதில்லையே?
தீபா மேத்தாவின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதன் ஒரு பகுதியாக அவர் தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாட்ஸ் குக்கிங் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வாங்கியிருக்கிறது. இந்தியை நான் ஒதுக்கவில்லை. சவாலான வேடங்கள் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
தெலுங்கில்…?
ரவிதேஜா ஜோடியாக டான் சீனு படத்தில் நடிக்கிறேன். நான் எதிர்பார்த்த சவாலான வேடம். விரும்பி நடிக்கிறேன்.
படத்துக்கு படம் உங்கள் அழகு கூடி வருகிறதே…?
தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். நீச்சல், யோகா இரண்டும் என்னுடைய டெய்லி அட்டவணையில் தவறுவதில்லை. என் இளமைக்கு இதுதான் காரணமாக இருக்கலாம்
0 comments:
Post a Comment