6.22.2010

உலகிலேயே சிறந்த மொழி தமிழ்: ரஷ்ய தமிழ் அறிஞர் தெரிவிப்பு

உலகிலேயே சிறந்த மொழி தமிழ் என்று மாஸ்கோ பல்கலைக்கழக தமிழறிஞர் அலெக்சாண்டர் துபி யான்ஸ்கி கூறினார்.

சென்னையில் உள்ள ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாசார மையத்தில் அவர் நேற்று அளித்த பேட்டி:

உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டில் பல் வேறு நாட்டு தமிழ் அறிஞர், தமிழ் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர். எனக்கும் அழைப்பு வந்தது. தமிழ் மீது எனக்குள்ள ஆர்வம் காரணமாக மா நாட்டில் கலந்து கொள்வ தற்காக நான் வந்துள்ளேன். தமிழகத்திற்கு நான் வருவது 15வது முறை. இந்த மா நாட்டால் தமிழுக்கு பெருமை. தமிழ் மீது உள்ள மதிப்பு, மரியாதையால் மாநாட்டில் ஆயிரக்கணக் கில் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். தமிழ் உலக மொழிகளில் சிறந்த மொழி. தமிழை மேலும் வளர்க்க வேண்டும்.

உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டில் தொல் காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க உள்ளேன். அவர்கள் அதனை நூலாக வெளியிடப் போகிறார்கள். தமிழுக்கு நல்ல தன்மை உண்டு. தமிழை வளர்க்க நான் பாடுபடுவேன். தமிழ் மொழிக்கும், ரஷ்யா மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரஷ்யா வில் தமிழை கற்பிக்கும், கற்கும் மரபு வளர்கிறது. மாஸ்கோ பல்கலைக்கழகத் தில் தமிழ் வகுப்புகள் உள்ளன. 5 மாணவர்கள் தமிழ் படிக்கின்றனர். அந்த மாணவர்கள் தமிழை கற்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர். அதற்காக, சென்னை பல்கலை.யில் அந்த மாணவர்கள் தமிழை கற்பதற்காக துணை வேந்தர் திருவாசகத்திடம் பேசி யிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா & ரஷ்யா வர்த்தக சபையின் தலைவர் லட்சுமிநாராயணன், பொதுச்செயலாளர் தேனப்பன் ரஷ்யா மொழி கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டேட்டியான பெரேவா, எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் மாநாட்டுக்கு வந்துள்ள மாஸ்கோ பல்கலை. மாணவி ஆகியோர் உடன் இருந்தனர்.

0 comments:

Post a Comment