6.28.2010

குஜராத்தில் மேலும் ஓர் எண்ணெய்க் கிணறு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் மேலும் ஓர் எண்ணெய்க் கிணறை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. ÷சிபி10ஏ-என்1 என்ற பகுதியில் ஹைட்ரோகார்பன் படிமங்கள் இருப்பதாக நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.÷இந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து நாளொன்றுக்கு 410 பீப்பாய் கச்சா எண்ணெய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதியில் மொத்தம் 17 இடங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் அகழ்வுப் பணியை மேற்கொண்டுள்ளது. அதில் 6 கிணற்றில் மட்டுமே எண்ணெய் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது மேலும் ஒரு எண்ணெய்க் கிணறு கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இந்த எண்ணெய்க் கிணறுக்கு திருபாய்-50 என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 7 எண்ணெய்க் கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், எவ்வளவு எண்ணெய் கிடைக்கும் என்பதை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.÷இந்த எண்ணெய்க் கிணறு குறித்த அறிவிப்பை அரசுக்கும் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகத்திடமும் தெரிவித்து விட்டதாகவும் நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ÷சிபி-ஓஎன்என்-2003 எண்ணெய்க் கிணறு ஆமதாபாதிலிருந்து 130 கி.மீ. தொலைவில் காம்பே வளைகுடாவில் அமைந்துள்ளது. இரு பகுதிகளைக் கொண்ட இந்த பகுதியின் மொத்த பரப்பு 635 சதுர கிலோமீட்டராகும். இந்தப் பகுதி முழுவதிலும் எண்ணெய் அகழ்வுப் பணிக்கான முதலீட்டை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீúஸ செய்துள்ளது. அரசின் புதிய எண்ணெய் அகழ்வு கொள்கையின்படி (என்இஎல்பி) நடத்தப்பட்ட ஏலத்தில் இந்தப் பகுதிக்கான லைசென்ûஸ இந்நிறுவனம் பெற்றது.÷இந்தப் பகுதி முழுவதும் 2-டி செஸிமிக் முறையில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 80 சதவீத பகுதியில் 3-டி செஸிமிக் முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 17 எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டன. இதில் 13 கிணறுகள் முதல் பகுதியில் அமைந்துள்ளன. ÷கடந்த 11-ம் தேதி 6-வது எண்ணெய்க் கிணறு அகழ்வு குறித்த தகவலை ரிலையன்ஸ் வெளியிட்டது. தற்போது 7-வது எண்ணெய்க் கிணறு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment