6.24.2010

இலங்கையை வீழ்த்தி ஆசியக் கோப்பையை இந்தியா வென்றது

தம்புல்லாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 269 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறஙிய இலங்கை 45-வது ஓவரில் 187 ரன்களுக்குச் சுருண்டது. ஆஷிஷ் நெஹ்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அபாரமாக பந்து வீசி இந்தியாவை சாம்பியன் பட்டத்திற்கு இட்டுச் சென்றார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா 5-வது ஆசியக் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்த்க்கது. 4 கேட்ச்களையும், ஒரு ஸ்டம்பிங்கையும் செய்து இந்திய அணித் தலைவர் தோனி புதிய ஆசியக் கோப்பை சாதனை படைத்தார்.

முதலில் சரிவைத் துவக்கியவர் பிரவீண் குமார், முதல் ஓவரிலேயே தில்ஷானுக்கு ஒரு ஷாட் பிட்ச் பவுன்சரை வீச அதனை அவர் புல் செய்ய முயன்று ஹர்பஜன் சிங்கிடம் மிட் ஆன் திசையில் எளிதான கேட்சில் வீழ்ந்தார்.

இந்தத் துவக்கம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தியது. மைதானத்தில் வீசிய கடுமையான காற்றும் ஸ்விங் பந்து வீச்சிற்கு சாதகமாக அமைந்தது.

ஜாகீர் கானும் அபாரமாக துவங்கினார். அவர் உபுல் தரங்காவை தனது ஆஃப் கட்டர் மூலம் ஏமாற்றினார். அவர் பந்தை விட்டு விட முடிவு செய்ய அது ஸ்டம்ப்களை பதம் பார்த்தது. தரங்கா 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் 14-வது ஓவர், நெஹ்ரா வீசிய ஓவர் இலங்கை அணியின் விதியை நிர்ணயித்தது.

3-வது பந்தில் மகேலா ஜெயவர்தனேக்கு அவர் அருமையான பந்தை வீச அதனை அவர் எட்ஜ் செய்து தோனியிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்தே மேத்யூஸிற்கு வீசிய பந்து விளையாட முடியாத ஒரு பந்து அது பேட்டைத் தாணி ஸ்டம்ப்களி எப்படி தவறவிட்டுச் சென்றது என்பது புதிர்தான்.

ஆனால் அடுத்த பந்தில் வெளியே சென்ற ஒன்றை மேத்யூஸ் துரத்தி எட்ஜ் செய்தார். தோனி பிடித்தார்.

அதன் பிறகு மிக முக்கிய விக்கெட்டான சங்கக்காராவை ஷாட் பிட்ச் பந்து வீசி நெஹ்ரா வீழ்த்த இலங்கை 51/5 என்று சரிவு கண்டது.

அதன் பிறகு அடிக்க வேண்டிய ரன் விகிதம் தாறுமாறாக எகிறத் தொடங்கியது. கண்டாம்பி 31 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். மஹரூஃபை, கான் வீழ்த்தினார்.

குலசேகரா, முரளிதரன் ஆகியோரை ஜடேஜா வீழ்த்தினார். இடையே மலிங்காவை நெஹ்ரா வீழ்த்தினார்.

கபுகேதரா 88பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சர் என்று 55 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தாலும் அவரால் அச்சுறுத்தல் ஒன்றும் இல்லை.

ஜாகீர் கான் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், நெஹ்ர 9 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

44.4 ஓவர்களில் இலங்கை 187 ரன்களுக்கு சுருண்டது. ஆட்ட நாயகனாக அருமையான 66 ரன்களை எடுத்த தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

"இந்தியாவின் பந்து வீச்சு தங்களை விட நன்றாக இருந்தது என்றும் இந்திய அணியினர் முதல் 15 ஓவர்கள் வீசிய பந்து வீச்சு நாங்கள் வீசியதை விட சிறப்பாக அமைந்தது." என்று கூறினார் சங்கக்காரா.

0 comments:

Post a Comment