6.24.2010

செம்மொழி மாநாட்டுக்காக ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கூடாது:சுப்பிரமணிய சாமி வழக்கு

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள அவரது மனுவில் கூறியிருப்பதாவது:

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500 ஆயுள் தண்டனை கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்பாகவே விடுதலை செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு 1,405 ஆயுள் தண்டனை கைதிகளை தண்டனை காலத்துக்கு முன்னதாகவே சிறையில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில் முடிவு ஏற்படாத நிலையில், மீண்டும் அதே போன்ற ஒரு திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தினால், அது நீதிமன்ற அவமதிப்பு செயலாக அமையும்.

எனவே, தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 500 ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment