6.24.2010

தமிழில் வாதாட அனுமதிக்க கோரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும், ஆங்கில மொழியாக்க தொழில்நுட்பத்தை செயல்படுத்த உத்தரவிடவேண்டும் என்று கோ‌ரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

டெல்லியில் உள்ள அகில இந்திய இளநிலை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌‌ட்டு‌ள்ள பொதுநல மனு‌வி‌ல், ‌பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் ‌நீ‌திம‌ன்ற‌ங்களில் பிராந்திய மொழியான இந்தியில் வாதாடப்பட்டு வருகிறது.

தமிழ் மொழி மூலம் பாட வகுப்பு நடத்தும் டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மாணவர்கள் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌திலு‌ம், மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையிலும் உள்ள ஆவணங்கள் ஆங்கிலத்தில் இருப்பதால் மொழி பெயர்ப்புக்காக ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல் உள்ள குமாஸ்தாக்களின் உதவியை நாட வேண்டி உள்ளது.

தங்கள் மனதில் உள்ள வாதத்தை தமிழ் மொழியில் முன்வைக்க அவர்களால் இயலவில்லை. சட்டப்பிரிவு 348-ன் படி குடியரசு‌த் தலைவ‌ரின் ஒப்புதலைப் பெற்று மாநில ஆளுநர், பிராந்திய ‌நீ‌திம‌ன்ற‌ங்களில் பிராந்திய மொழிகளில் வாதாட அனுமதி அளிக்க அதிகாரம் உள்ளது.

தமிழ்நாட்டில் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ளி‌ல் தமிழில் வாதாட அனுமதி கோரி போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதை வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை நிலுவையில் உள்ளது. வக்கீல்கள் தமிழில் வழக்காட அனுமதிக்கும்படி தமிழக முதலமைச்சரும் உள்துறை அமைச்சகத்தை கோரியுள்ளார்.

அரசியலமைப்பு சட்டம் 14ன் அடிப்படையில் வழ‌க்க‌றிஞ‌ர்கள் தாய்மொழியில் வாதாட சில மாநில ‌நீ‌திம‌ன்ற‌ங்களில் அனுமதி அளிக்கப்பட்டது போல் அனைத்து மாநில உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ங்களிலும் இதே நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும். ஐ.நா.சபையில் பிராந்திய மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாய்மொழியில் பேசும் போது மொழி பெயர்ப்பாளர் மூலம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. இதேபோல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளும் பிராந்திய மொழியில் நடைபெறும் வாதங்களை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பாளர் மூலம் மொழியாக்கம் செய்து கொள்ளும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடைமுறையை உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌திலு‌ம், மாநில உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தமிழில் வழக்காடும் உரிமை கோரும் தமிழக வழ‌க்க‌றிஞ‌ர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எ‌ன்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இ‌ந்த மனு‌வி‌ல் மத்திய உள்துறை செயலர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை செயலர், மத்திய சட்டத்துறை செயலர், இந்திய வழக்கறிஞர் சங்க தலைவர், தமிழக அரசின் தலைமைச் செயலர், தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் ஆகியோர் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

0 comments:

Post a Comment