6.24.2010

நடிகை மேக்னா நாயுடு கர்ப்பமாக இருப்பதாக ஆபாச இ-மெயில்

நடிகை மேக்னா நாயுடுவின் இ-மெயில் முகவரியை தவறாக பயன்படுத்திய மர்ம ஆசாமி ஒருவன், அவர் கர்ப்பமாக இருப்பதாக அவதூறு செய்தி பரப்பி விட்டுள்ளான். இதுகுறித்து சைபர் கிரைம் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை மேக்னா நாயுடு. இவர் மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தமிழில் நடிகர் சரத்குமாருடன் `வைத்தீஸ்வரன்` மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில் இசை ஆல்பமும் செய்திருக்கிறார்.


கடந்த சில நாட்களாக மேக்னா நாயுடுவின் இ-மெயில் முகவரியில் இருந்து அவருடைய தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் தொடர்ச்சியாக இ-மெயில்கள் வந்தன. அவற்றில், “நான்(மேக்னாநாயுடு) கர்ப்பமாக இருக்கிறேன்.

ஆனால் என்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியவில்லை” என்று மேக்னா நாயுடு சொல்வது போல கூறப்பட்டு இருந்தது. மேலும் இந்த இ-மெயில்களுடன் சில ஆபாச படங்களும் இணைக்கப்பட்டு இருந்தன.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோழிகளும், உறவினர்களும் மேக்னா நாயுடுவை தொடர்பு கொண்டு இ-மெயில் விபரத்தை கூறி “உனக்கு என்னாச்சு..?” என்று செல்போனில் திட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மேக்னா நாயுடு தன்னுடைய இ-மெயில் முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட இ-மெயில்களை சோதனை செய்தார். அப்போதுதான் யாரோ ஒரு மர்ம ஆசாமி தன்னுடைய இ-மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி, அவதூறு பரப்பி இருப்பது அவருக்கு தெரிய வந்தது.

உடனே அவர் கப்பரேடு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment