6.25.2010

வெளிநாட்டு பின்னணி கொண்ட மாணவர்கள் பரீட்சையில் சாதனை

இந்த ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற உயர் கல்விக்கான பரீட்சையில் முடிவுகளில் வெளிநாட்டு பின்னணி கொண்ட மாணவர்கள் அதிகூடிய புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். கிம்நாசியம் உயர் வகுப்புக்களில் 35.500 மாணவர்கள் சிறப்பாக கற்றுத் தேறியிருக்கிறார்கள். இவர்களில் 3011 பேர் வெளிநாட்டு பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள். கடந்த 1999 ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 1783 பேர் அதிகமாக உள்ளனர். சென்ற வாரம் ஈரான் – பாலஸ்தீன பெற்றோருக்கு பிறந்த அமினா மியாய்டி என்ற 19 வயது மாணவி 12 புள்ளிகள் பெற்று சாதனை படைத்தார். இப்போது பரடைசியா கிம்நாசியத்தில் படித்த ஷோபியா சிவகுமரன் என்ற தமிழ் மாணவி உயர் புள்ளிகள் பெற்று பரடைசியா கிம்நாசியத்தின் இந்த ஆண்டுக்கான முதலாவது இடம் பெற்ற மாணவியாக தேர்வாகியுள்ளதாக 24 ரீம பத்திரிகை எழுதியுள்ளது. அதேபோல ஒல்போ பல்கலைக்கழகத்தில் திரைப்படத்துறை, ஊடகத்துறைக்கான பீ.எஸ்.சி கற்கையில் 12 புள்ளிகள் பெற்று சித்தயடைந்துள்ளார் வஸந்த் செல்லத்துரை என்ற மாணவர். பல நகரங்களிலும் தமிழ் மாணவர்களின் புள்ளிகள் குறித்த தகவல்களை பெற்றபோது சுமார் 10 புள்ளிகள் பெற்று முன்னணி வகிப்பதைக் காணமுடிகிறது. இதுபோல சகல நகரங்களிலும் வெளிநாட்டு பின்னணி கொண்ட மாணவர்கள் கல்வியில் முன்னணி பெற்று வருகிறார்கள்.

0 comments:

Post a Comment