7.02.2010

உதிரத்தை உறைய வைத்த கானாவின் தோல்வி பிரேசிலும் அவுட்..

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் கால் இறுதிப்போட்டியில் கானா – உருகுவே ஆடிய ஆட்டம் மயிர்க்கூச்செறிய வைத்தது. கானா வெற்றிபெற வேண்டிய பல இடங்கள் தவறிப்போய் தோல்வியைத் தழுவியது. இறுதியாக நடைபெற்ற பனால்டி முறையில் கானா தோல்வியடைந்தது.


இரு தரப்பும் தலா 1 – 1 என்ற கோல்களை போட்ட நிலையில் ஆட்டம் சம நிலையில் இருந்தது. இந்தப் போட்டியின் மேலதிக நேரத்தின் கடைசியில் கானா ஒரு கோலைப் போட்டது. அதை உருகுவேயின் சுவாரஸ் கைகளால் தடுத்தார், அவருக்கு சிவப்பு காட் காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் கொடுக்கப்பட்ட பனால்டியை கானா தவறவிட்டது.

பின்னர் நடைபெற்ற பனால்டி முறையில் கானா தோல்வியடைந்தது. முதல் தடவையாக ஆபிரிக்க நாடொன்று அரையிறுதிப் போட்டிக்குள் போனது என்ற சாதனையை எட்டித் தொடாமலே கானா சறுக்கியது. ஆயினும் அதன் வீரர்கள் சிறப்பாக ஆடியமை குறிப்பிடத்தக்கது. உருகுவே வீரர் சுவாரஸ் பந்தை கைகளால் அடித்து, தனது அணிக்கு வெற்றிபெற்று கொடுத்து சரித்திரத்தில் தனது பெயரைப் பதித்துக் கொண்டார்.

இதற்கு முதல் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் கொலன்ட் ஆகிய அணிகள் மோதின. முதலில் பிரேசில் ஒரு கோலைப் போட்டது. இடைவேளையின் பின்னர் கொலன்ட் இரண்டு கோல்களை போட்டது. அதன் பின்னர் பிரேசில் தளம்ப ஆரம்பித்தது. ஒருவர் சிகப்பு காட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் பிரேசில் சரிய ஆரம்பித்து தோல்வியை தழுவியது.

1 comments:

  1. அட போங்கப்பா நிங்களும் உங்க பூட்...

    ReplyDelete