6.29.2010

ராமேசுவரம், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு மீண்டும் படகு போக்குவரத்து

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்திற்கும் போர் முடிந்துள்ள நிலையில் புனரமைப்பு பணிகளை இலங்கை அரசு முடுக்கி விட்டுள்ளது.

அந்த பணிகளுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் முழு அளவில் உதவி செய்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக, 27 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது.

சமீபத்தில், இந்தியா வுக்கு வந்த அதிபர் ராஜபக்சே, இது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, படகு போக்குவரத்துக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

படகு போக்குவரத்து ஆய்வு பணிகளை மீன் வளத்துறை அதிகாரிகளும், கடல்சார் வாரிய அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:- விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே போர் வெடித்ததால், கடந்த 1983-ம் ஆண்டில் தூத்துக்குடிக்கும், இலங்கைக்கும் இடையிலான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தற்போது, 27 ஆண்டுகளுக்கு பிறகு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்க உள்ளது. ராமேசுவரம் மற்றும் தலைமன்னாருக்கு இடையிலும், தூத்துக்குடி மற்றும் கொழும்புக்கு இடையிலும் இரண்டு மார்க்கமாக படகு போக்குவரத்து தொடங்கப்படும்.

நாகப்பட்டினத்தில் இருந்து கொழும்புக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, படகு போக்குவரத்து தொடங்க உள்ளது. இரண்டு நாட்க ளுக்கு ஒருமுறை சென்னையை சேர்ந்த தொழில் மற்றும் தொழில் நுட்ப ஆலோசனை நிறுவனத் தின் உதவி யோடு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆய்வு பணிகளை, தமிழ்நாடு கடல்சார் வாரியம் நடத்துகிறது.

முதல் கட்டதாக, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை படகு விடப்படும். பின்னர், தினமும் படகுகள் இயக்கப்படும். இந்த படகு போக்குவரத்தினால் இந்தியாவில் ஆன்மீக சுற்றுப்பயணம் செய்ய இலங்கை பயணிகள்அதிக அளவில் வருவார்கள்.

இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment