7.04.2010

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முதல்வர் கருணாநிதியின் குடும்பம் அரசியல் மட்டுமல்லாமல் கலையுடன் பிறந்த குடும்பமுமாகும். கருணாநிதியே ஒரு கலை பிதாமகராக இருக்கிறார். அவரைத் தொடர்நது மூத்த மகன் மு.க.முத்து நடிகராக இருந்தார். முத்துவின் மகன் இப்போது பாடகராக, நடிகராக மாறி வருகிறார்.

அதேபோல மு.க.ஸ்டாலின் சினிமாவில் நடித்துள்ளார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பிசியான தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

மத்திய அமைச்சராக உள்ள மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் தயாரிப்பாளராக இருக்கிறார். மு.க.தமிழரசுவின் மகன் ஹீரோவாகியுள்ளார். இதன் மூலம் தமிழரசும் தயாரிப்பாளராகியுள்ளார்.

இந்த நிலையில், மகள் கனிமொழியும் இப்போது திரைத் துறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. படம் ஒன்ற அவர் தயாரிக்கவுள்ளதாக கனிமொழிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இயக்குநர் , நடிகர், நடிகையர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரியவில்லை. அதுதொடர்பான விவாதம் நடந்து வருவதாக தெரிகிறது. இந்தப் படம் பிரமாண்டமானதாக இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

0 comments:

Post a Comment