7.03.2010

ஆர்ஜென்டீனா, பரகுவே கால் இறுதிப் போட்டியில் தோல்வி

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டு கால் இறுதி ஆட்டங்களிலும் ஜேர்மனி, ஸ்பானியா ஆகிய இரு நாடுகளும் வெற்றிபெற்று அரையிறுதித் தேர்வுக்குள் நுழைந்தன. அதேவேளை ஆர்ஜென்டீனா, பரகுவே ஆகிய இரு நாடுகளும் தோல்வியைத் தழுவி வெளியேறின.

போட்டியில் ஆர்ஜென்டீனா ஜேர்மனியிடம் 4 – 0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. அந்த நாட்டின் பயிற்சியாளர் மரடோனா தனது காலத்து விளையாட்டு முறையை வியூகமாக அமைத்திருந்தார். ஆனால் ஜேர்மன் பயிற்சியாளர் மேலதிகமாக இரண்டு வீரர்களை நிறுத்தி அந்த வழியை முற்றாக அடைத்துவிட்டார். ஆர்ஜென்டீனா வீரர்கள் உள்ளே நுழைய முடியாத இரும்புச் சுவராக ஜேர்மனிய வீரர்கள் நின்றார்கள். இடைவேளை வரை 1 – 0 என்ற கோல் கணக்கில் இருந்த ஆர்ஜென்டீனா புதிதான ஒரு விளையாட்டு உத்தியை கற்றிராத காரணத்தால் தொடர்ந்து அதே பாணியில் விளையாடி, குழப்ப நிலையடைந்து தோல்வியைத் தழுவியது. பழைய விளையாட்டு வீரர்களை பயிற்சியாளராக நியமிப்பதில் உள்ள சிக்கல்களை டென்மார்க் போலவே ஆர்ஜென்டீனாவும் சந்தித்தது.

அடுத்து நடைபெற்ற ஸ்பானியா – பரகுவே ஆட்டம் கோல்கள் இன்றித் தொடர்ந்தது. இடைவேளையின் பின்னர் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு பனால்டி கிடைத்தது. ஆனால் இருவருமே கோல் போடவில்லை. இறுதியாக தற்செயலாகப் போடப்பட்ட ஒரு கோலினால் ஸ்பானியா வெற்றிபெற்றது.

0 comments:

Post a Comment