7.03.2010

23வது ஜேம்ஸ் பான்ட் படம் கைவிடப்பட்டது

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 23வது ஜேம்ஸ் பான்ட் படம் கைவிடப்பட்டுள்ளது. இந்தப் படம் மீண்டும் படப்பிடிப்புக்குச் செல்ல நீண்ட காலமாகும் எனவும் கூறப்படுகிறது.

ஜேம்ஸ் பான்ட் வேடத்தில் டேணியல் கிரேக் 3வது முறையாக நடிக்கும், 23வது ஜேம்ஸ் பான்ட் படம் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், படத்தைத் தயாரிக்கும் எம்ஜிஎம் நிறுவனம் நிதிப் பிரச்சினையில் தள்ளாடி வருவதால் படத்தயாரிப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்தற்போது படத்தையே ரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பான்ட் படத் தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒருவர் கூறுகையில், பான்ட் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக் குழுவினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. போதிய நிதியில்லாததே இதற்குக் காரணம் என்றார்.

சாம் மென்டிஸ் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. தற்போது படம் கைவிடப்பட்டுள்ளதால் மீண்டும் இது எப்போது தொடங்கப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் நெடு நாட்களாகும் என்று கூறுகிறார்கள்.

எம்ஜிஎம் நிறுவனம் 3.7 பில்லியன் டாலர் கடனில் மூழ்கியுள்ளதாம்.

0 comments:

Post a Comment