7.30.2010

பல்லு பிடுங்குவதைவிட பழம் பிடுங்குவதே மேல் பல் வைத்தியர்.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் நிலவுகிறது. டென்மார்க்கில் கோடை காலங்களில் நிலத்தடி பழ மரங்களில் பக்கத்தில் இருந்து நாரிக்கட்டை முறிய பழம் பிடுங்கும் வேலைக்கும் தயார் என்று பல விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து குவிந்தவண்ணமுள்ளன. 2008 ம் ஆண்டு 10.700 விண்ணப்பங்கள் வந்தன, இவ்வாண்டு 24.200 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

பல்வைத்தியர் கல்வி முடித்த ருமேனிய இளைஞர் ஒருவரும் பழம் பிடுங்க வருவதற்கு விண்ணப்பித்துள்ளார். வருடாவருடம் இத்தகைய பருவகால வேலைகளுக்கு 6000 – 8000 பேர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவதுண்டு. பல விண்ணப்பதாரிகள் தம்மை விரைவில் அழைக்கும்படி அழுத்தம் கொடுத்து கடிதங்களை அனுப்புகிறார்கள். இக்கடிதங்களில் அவர்களின் கடும் விரக்திநிலை தொனிப்பதாகக் கூறப்படுகிறது.

1 comments:

  1. நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete