7.08.2010

ஊழியர்களை குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு

பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்டிலும், ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையை கையாளத் துவங்கியுள்ளன.

பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க துவங்கியுள்ளன.

சிறிய அளவில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 5,000 பேரை வேலை நீ்க்கம் செய்தது. இந் நிலையி்ல் இந்த வாரத்தில் மேலும் பலரை நீக்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.எத்தனை பேர் நீக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், அது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்ட் கிளைகள் முழுவதிலும் இந்த பணி நீக்கம் அமலாக்கப்படும் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment