8.10.2010

த்ரிஷாவை தேர்வு செய்த சல்மான்

சல்மான் கானின் பேவரைட் நடிகையாக இருக்கிறார் அசின். லண்டன் ட்ரீம்ஸ் படத்துக்கு பின் ரெடி படத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்யுமாறு தயாரிப்பாளருக்கு சல்மான் உத்தரவிட்டார். இப்போது ரெடியில் அசின் நடித்து வருகிறார். இதையடுத்து சாஜித் நதியாத்வாலா தயாரிக்கும் படத்துக்கும் அசினின் பெயரையே சல்மான் சிபாரிசு செய்தார். ஆனால் ரெடியில் அசின் நடிப்பதால் இதில் வேண்டாம் என தயாரிப்பாளர் சொல்லியிருக்கிறார். இதற்கு ஒப்புக்கொண்ட சல்மான், வேறு ஹீரோயினை பார்க்குமாறும் புதுமுகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்கிறார். சரி என கிளம்பிய தயாரிப்பு, ஒரே வாரத்தில் சல்மானிடம் திரும்பி வந்தார். படாத பாடு பட்டு, பல புதுமுகங்களின் போட்டோ ஆல்பங்களை சல்மான் முன் குவித்துவிட்டார்.

இதில் ஒருவரை தேர்வு செய்யுங்கள் என தயாரிப்பாளர் சாஜஞித் கூற, இதில் யாரும் வேண்டாம். நான் ஹீரோயினை தேர்வு செய்துவிட்டேன் என்றாராம் சல்மான். நொந்துபோன சாஜித், யார்? என கேட்க, சட்டென சல்மானிடமிருந்து வந்த பதில், த்ரிஷா. பிரியதர்ஷன் இயக்கத்தில் கட்டா மிட்டா மூலம் இந்தியில் அறிமுகமானார் த்ரிஷா. இப்படம் ஓடவில்லை. படத்தை தயாரித்த அக்ஷய் குமார், தனது நிறுவனத்தின் அடுத்த இரு படங்களுக்கும் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்திருந்தார். கட்டா மிட்டா ஓடாததால் அடுத்த படங்களை பற்றி இப்போது அக்ஷய் பேசுவதே இல்லையாம். இதனால் த்ரிஷா அப்செட்டில் இருக்கிறார். த்ரிஷா எனக்கு குழந்தை மாதிரி என சொன்னவர் பிரியதர்ஷன். அதனால் த்ரிஷாவின் பெயரை தனது இன்னொரு நண்பரான சல்மான் கானிடம் சிபாரிசு செய்தாராம் பிரியதர்ஷன். இதையடுத்துதான் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைதஙிதிருப்பதாக பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது

0 comments:

Post a Comment