8.10.2010

சீனாவில் கடற்கன்னி சிலை 30 இலட்சம்பேர் பார்த்தனர்

டென்மார்க்கின் புகழ் பெற்ற நினைவுச் சின்னமான கடற்கன்னி சிலையின் கழுத்தை அவ்வப்போது பெண் உரிமைவாதிகள் அறுத்தெறிந்தாலும் சீனாவில் அதன் புகழ் அதிகரித்து வருகிறது. தற்போது சீனாவின் தென்புறத்தில் வைக்கப்பட்டுள்ள கடற்கன்னி சிலையை இதுவரை 30 இலட்சம்பேர் பார்வையிட்டுள்ளதாகவும், கடற்கன்னியை பார்வையிடும் ஆவல் சீனாவில் பெருகி வருவதாகவும் சீன செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் எக்ஸ்போ 2010 கடந்த ஏப்ரல் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே இத்தொகை கணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சீனா எக்ஸ்போ 2010 ல் டென்மார்க்கின் கண்காட்சிகள் பெரு வெற்றிபெற கடற்கன்னியும் துணையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை மேலை நாடுகள் தவிர மற்றய நாடுகளில் இருந்து டென்மார்க் வருவோரை தடுக்க வேண்டுமென்று பிரேரணை கொண்டு வரும் டேனிஸ் மக்கள் கட்சி இந்த விவகாரத்தை மனதில் கொண்டால் இப்படியான பிரேரணைகளை கொடுண்டு வருமா என்பதும் சிந்தையைத் தூண்டும் கேள்வியாகும்.

0 comments:

Post a Comment