7.05.2010

உலகக் கோப்பையை வெல்லத் தயாராகும் ஐரோப்பிய அணிகள்

ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் கோப்பையை வென்றதில்லை என்ற இழுக்குடன் இருக்கும் ஐரோப்பிய அணிகள், இந்த முறை அதை வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

இதுவரை நடந்துள்ள 18 (தென் ஆப்பிரிக்காவை சேர்க்காமல்) உலகக் கோப்பைப் போட்டிகளில் ஐரோப்பிய கண்டத்தில் நடந்த போட்டிகளில் ஐரோப்பிய அணி எதுவும் வெற்றி பெற்று கோப்பையை வென்றதில்லை. இது வலுவான ஐரோப்பிய அணிகளுக்கு பெரும் இழுக்காக இருந்து வருகிறது. ஆனால் அதற்கு இப்போது விடிவு காலம் பிறக்கவுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 16வது உலகக் கோப்பை போட்டித்தொடரின் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ள நான்கு அணிகளில் உருகுவே மட்டும்தான் தென் அமெரிக்க அணியாகும். மற்ற மூன்றும் ஐரோப்பிய அணிகளாகும். எனவே இறுதிப் போட்டிக்கு இரண்டு ஐரோப்பிய அணிகள் முன்னேறினால் இழுபறி கோப்பை ஐரோப்பாவின் வசமாகும் வாய்ப்பு உறுதியாகும்.

ஜெர்மனி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு தறபோது அதிகரித்து வருகிறது. அடுத்து ஸ்பெயின் அணி மீது அதிக நம்பிக்கை உள்ளது. உருகுவே, நெதர்லாந்து ஆகியவற்றுக்கு சமமான அளவில் ஆதரவு காணப்படுகிறது. இருப்பினும் உருகுவே அணி கோப்பையை வெல்வது கடினம் என்று பொதுவான கருத்து காணப்படுகிறது.

தற்போதைய நிலையில் ஜெர்மனி மிகவும் வலுவாக உள்ளதால் அந்த அணிக்கே இந்த முறை கோப்பை என்பது கால்பந்து ரசிகர்களின் வலுவான நம்பிக்கையாக உள்ளது.

கடந்த முறை நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்ஸும், இத்தாலியும் மோதின. இந்த முறை உருகுவே தோற்கடிக்கப்பட்டால், தொடர்ந்து 2வது முறையாக ஐரோப்பிய அணிகள் மோதும் இறுதிப் போட்டியாக அது அமையும்.

நடப்பு உலகக் கோப்பைப் போட்டித் தொடரின் சுற்றுப் போட்டிகளில் 13 ஐரோப்பிய அணிகளில் 7 வெளியேற்றப்பட்டன. அதேசமயம், ஐந்து தென் அமெரிக்க அணிகளும் தோல்வியே அடையாமல் நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறின.

நாக் அவுட் ரவுண்டில் உருகுவேயைத் தவிர அனைத்து தென் அமெரிக்க அணிகளும் தோற்றுப் போய் விட்டன. அதேசமயம், ஐரோப்பிய அணிகள், உலகின் அனைத்துப் பகுதி அணிகளையும் வென்று அரை இறுதிக்குள் வந்துள்ளன.

கடந்த 19070ம் ஆண்டுக்குப் பின்னர் 2002ல்தான் அரைஇறுதியில் 3 ஐரோப்பிய அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. அதன் பிறகு இப்போதுதான் 3 அணிகள் அரை இறுதிக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த முறையும் ஐரோப்பாவுக்கே கோப்பை. அதுவும்,ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே வெல்லப்படும் முதல் கோப்பையாக இது அமையும் என ஐரோப்பிய ரசிகர்கள் குஷியுடன் உள்ளனர்.

0 comments:

Post a Comment