9.26.2010

டைட்டானிக் மூழ்கியதேன்? கப்பல் அதிகாரியின் பேத்தி தகவல்

டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளார் லூயிஸ்பேட்டன் என்பவர். இவர் தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத்து இந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதான் அந்த இரகசியம் :

“டைட்டானிக் கப்பலுக்கு முன்னால் பனிக்கட்டி மிதப்பதைக் கண்டுபிடித்து, கப்பலை இடது பக்கமாக திருப்பச் சொன்னார்கள். ஆனால் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பி விட்டார்கள்.

மேலும் திசை திருப்பும் கருவியும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால்தான் கப்பல் பனிக்கட்டியில் மூழ்கிவிட்டது” என்று அவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கு முன் பனிக்கட்டியில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் உயிர்காக்கும் படகு மூலம் தப்பித்துக் கொண்டனர்.

உயிர் தப்பியவர்களில் சார்ளஸ் மைட்டோலர் என்ற மூத்த கப்பல் அதிகாரியும் ஒருவர். இவருடைய பேத்தி தான் லூயிஸ்பேட்டன். இவர் டைட்டானிக் கப்பல் மூழ்கியது தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

அதில் டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார். தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத்தே இந்த இரகசியத்தை அவர் தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment