Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

7.05.2010

விம்பிள்டன் டென்னிஸ்-நடால் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஸ்பெயினின் ரஃபேல் நடால் வென்றுள்ளார்.

இறுதிப் போட்டியில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை 6-3,7-5, 6-4 என்கிற நேர் செட்டுகளில் அவர் வென்றார்.

உலக ஆடவர் தரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரஃபேல் நடால் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை வெல்வது இது இரண்டாவது முறையாகும்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் தனது முதல் பட்டத்தை 2008 ஆம் ஆண்டு வென்ற ரஃபேல் நடால், கடந்த ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தனது பட்டத்தை தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அண்மையில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியை அவர் ஐந்தாவது முறையாக வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 24 வயதாகும் ரஃபேல் நடால், ஆறு முறை விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ள ரோஜர் ஃபெடரரின் 16 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை எட்டிப் பிடிக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று டென்னிஸ் செய்தியாளர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியை வென்றுள்ள ரஃபேல் நடாலிடம் தோல்வியடைந்துள்ள தாமஸ் பெர்டிச், ரோஜர் ஃபெடரரை கால் இறுதிப் போட்டியில் வென்றிருந்தார்.

7.03.2010

ஆர்ஜென்டீனா, பரகுவே கால் இறுதிப் போட்டியில் தோல்வி

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இன்று நடைபெற்ற இரண்டு கால் இறுதி ஆட்டங்களிலும் ஜேர்மனி, ஸ்பானியா ஆகிய இரு நாடுகளும் வெற்றிபெற்று அரையிறுதித் தேர்வுக்குள் நுழைந்தன. அதேவேளை ஆர்ஜென்டீனா, பரகுவே ஆகிய இரு நாடுகளும் தோல்வியைத் தழுவி வெளியேறின.

போட்டியில் ஆர்ஜென்டீனா ஜேர்மனியிடம் 4 – 0 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. அந்த நாட்டின் பயிற்சியாளர் மரடோனா தனது காலத்து விளையாட்டு முறையை வியூகமாக அமைத்திருந்தார். ஆனால் ஜேர்மன் பயிற்சியாளர் மேலதிகமாக இரண்டு வீரர்களை நிறுத்தி அந்த வழியை முற்றாக அடைத்துவிட்டார். ஆர்ஜென்டீனா வீரர்கள் உள்ளே நுழைய முடியாத இரும்புச் சுவராக ஜேர்மனிய வீரர்கள் நின்றார்கள். இடைவேளை வரை 1 – 0 என்ற கோல் கணக்கில் இருந்த ஆர்ஜென்டீனா புதிதான ஒரு விளையாட்டு உத்தியை கற்றிராத காரணத்தால் தொடர்ந்து அதே பாணியில் விளையாடி, குழப்ப நிலையடைந்து தோல்வியைத் தழுவியது. பழைய விளையாட்டு வீரர்களை பயிற்சியாளராக நியமிப்பதில் உள்ள சிக்கல்களை டென்மார்க் போலவே ஆர்ஜென்டீனாவும் சந்தித்தது.

அடுத்து நடைபெற்ற ஸ்பானியா – பரகுவே ஆட்டம் கோல்கள் இன்றித் தொடர்ந்தது. இடைவேளையின் பின்னர் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு பனால்டி கிடைத்தது. ஆனால் இருவருமே கோல் போடவில்லை. இறுதியாக தற்செயலாகப் போடப்பட்ட ஒரு கோலினால் ஸ்பானியா வெற்றிபெற்றது.

7.02.2010

உதிரத்தை உறைய வைத்த கானாவின் தோல்வி பிரேசிலும் அவுட்..

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் கால் இறுதிப்போட்டியில் கானா – உருகுவே ஆடிய ஆட்டம் மயிர்க்கூச்செறிய வைத்தது. கானா வெற்றிபெற வேண்டிய பல இடங்கள் தவறிப்போய் தோல்வியைத் தழுவியது. இறுதியாக நடைபெற்ற பனால்டி முறையில் கானா தோல்வியடைந்தது.


இரு தரப்பும் தலா 1 – 1 என்ற கோல்களை போட்ட நிலையில் ஆட்டம் சம நிலையில் இருந்தது. இந்தப் போட்டியின் மேலதிக நேரத்தின் கடைசியில் கானா ஒரு கோலைப் போட்டது. அதை உருகுவேயின் சுவாரஸ் கைகளால் தடுத்தார், அவருக்கு சிவப்பு காட் காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் கொடுக்கப்பட்ட பனால்டியை கானா தவறவிட்டது.

பின்னர் நடைபெற்ற பனால்டி முறையில் கானா தோல்வியடைந்தது. முதல் தடவையாக ஆபிரிக்க நாடொன்று அரையிறுதிப் போட்டிக்குள் போனது என்ற சாதனையை எட்டித் தொடாமலே கானா சறுக்கியது. ஆயினும் அதன் வீரர்கள் சிறப்பாக ஆடியமை குறிப்பிடத்தக்கது. உருகுவே வீரர் சுவாரஸ் பந்தை கைகளால் அடித்து, தனது அணிக்கு வெற்றிபெற்று கொடுத்து சரித்திரத்தில் தனது பெயரைப் பதித்துக் கொண்டார்.

இதற்கு முதல் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் கொலன்ட் ஆகிய அணிகள் மோதின. முதலில் பிரேசில் ஒரு கோலைப் போட்டது. இடைவேளையின் பின்னர் கொலன்ட் இரண்டு கோல்களை போட்டது. அதன் பின்னர் பிரேசில் தளம்ப ஆரம்பித்தது. ஒருவர் சிகப்பு காட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். அத்துடன் பிரேசில் சரிய ஆரம்பித்து தோல்வியை தழுவியது.

6.24.2010

இலங்கையை வீழ்த்தி ஆசியக் கோப்பையை இந்தியா வென்றது

தம்புல்லாவில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 269 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறஙிய இலங்கை 45-வது ஓவரில் 187 ரன்களுக்குச் சுருண்டது. ஆஷிஷ் நெஹ்ரா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அபாரமாக பந்து வீசி இந்தியாவை சாம்பியன் பட்டத்திற்கு இட்டுச் சென்றார்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா 5-வது ஆசியக் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்த்க்கது. 4 கேட்ச்களையும், ஒரு ஸ்டம்பிங்கையும் செய்து இந்திய அணித் தலைவர் தோனி புதிய ஆசியக் கோப்பை சாதனை படைத்தார்.

முதலில் சரிவைத் துவக்கியவர் பிரவீண் குமார், முதல் ஓவரிலேயே தில்ஷானுக்கு ஒரு ஷாட் பிட்ச் பவுன்சரை வீச அதனை அவர் புல் செய்ய முயன்று ஹர்பஜன் சிங்கிடம் மிட் ஆன் திசையில் எளிதான கேட்சில் வீழ்ந்தார்.

இந்தத் துவக்கம் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் உத்வேகத்தை ஏற்படுத்தியது. மைதானத்தில் வீசிய கடுமையான காற்றும் ஸ்விங் பந்து வீச்சிற்கு சாதகமாக அமைந்தது.

ஜாகீர் கானும் அபாரமாக துவங்கினார். அவர் உபுல் தரங்காவை தனது ஆஃப் கட்டர் மூலம் ஏமாற்றினார். அவர் பந்தை விட்டு விட முடிவு செய்ய அது ஸ்டம்ப்களை பதம் பார்த்தது. தரங்கா 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆட்டத்தின் 14-வது ஓவர், நெஹ்ரா வீசிய ஓவர் இலங்கை அணியின் விதியை நிர்ணயித்தது.

3-வது பந்தில் மகேலா ஜெயவர்தனேக்கு அவர் அருமையான பந்தை வீச அதனை அவர் எட்ஜ் செய்து தோனியிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த பந்தே மேத்யூஸிற்கு வீசிய பந்து விளையாட முடியாத ஒரு பந்து அது பேட்டைத் தாணி ஸ்டம்ப்களி எப்படி தவறவிட்டுச் சென்றது என்பது புதிர்தான்.

ஆனால் அடுத்த பந்தில் வெளியே சென்ற ஒன்றை மேத்யூஸ் துரத்தி எட்ஜ் செய்தார். தோனி பிடித்தார்.

அதன் பிறகு மிக முக்கிய விக்கெட்டான சங்கக்காராவை ஷாட் பிட்ச் பந்து வீசி நெஹ்ரா வீழ்த்த இலங்கை 51/5 என்று சரிவு கண்டது.

அதன் பிறகு அடிக்க வேண்டிய ரன் விகிதம் தாறுமாறாக எகிறத் தொடங்கியது. கண்டாம்பி 31 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். மஹரூஃபை, கான் வீழ்த்தினார்.

குலசேகரா, முரளிதரன் ஆகியோரை ஜடேஜா வீழ்த்தினார். இடையே மலிங்காவை நெஹ்ரா வீழ்த்தினார்.

கபுகேதரா 88பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சர் என்று 55 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தாலும் அவரால் அச்சுறுத்தல் ஒன்றும் இல்லை.

ஜாகீர் கான் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், நெஹ்ர 9 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

44.4 ஓவர்களில் இலங்கை 187 ரன்களுக்கு சுருண்டது. ஆட்ட நாயகனாக அருமையான 66 ரன்களை எடுத்த தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

"இந்தியாவின் பந்து வீச்சு தங்களை விட நன்றாக இருந்தது என்றும் இந்திய அணியினர் முதல் 15 ஓவர்கள் வீசிய பந்து வீச்சு நாங்கள் வீசியதை விட சிறப்பாக அமைந்தது." என்று கூறினார் சங்கக்காரா.

6.23.2010

இந்திய விமானப் படையில் சச்சினுக்கு குரூப் கேப்டன் அந்தஸ்து

கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு விமானப் படையில் குரூப் கேப்டன் என்கிற கௌரவ பதவி வழங்கப்படவுள்ளது.இதுகுறித்து விமானப் படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சாதனையாளர்களுக்கு இந்திய ராணுவத்தின் முப்படைகளில் கெüரவ பதவிகளை வழங்குவது வழக்கம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்டோருக்கு இத்தகைய கெüரவப் பதவிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் சச்சினுக்கு விமானப்படையில் குரூப் கேப்டன் பதவி அளித்து கெüரவிக்கப்படவுள்ளது. கிரிக்கெட்டில் சச்சின் படைத்துள்ள சாதனைகளை கெüரவிக்கும் விதமாக இந்த பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளது.சச்சினுக்கு விமானப் படையில் கெüரவ பதவி அளிப்பதன்மூலம், படையில் சேர்வதற்கு இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சச்சினுக்கு குரூப் கேப்டன் பதவியை அளிப்பதற்கான ஏற்பாடுகளை விமானப் படை செய்து முடித்துள்ளது. குடியரசுத் தலைவரும், பிரதமர் அலுவலகமும் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த கெüரவப் பதவி சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்படும்.சச்சின் பெருமிதம்: குரூப் கேப்டன் கெüரவப் பதவி தனக்கு வழங்கப்படவுள்ளது பெருமிதம் அளிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.லண்டனிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இந்த கெüரவம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய விமானப் படையுடன் இணைந்து பணியாற்றவுள்ளது இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கிறது.இந்திய விமானப் படையின் விளம்பரத் தூதராக பணியாற்றவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கெüரவத்துக்காக மீண்டும் ஒரு முறை வணங்குகிறேன் என்றார் அவர்.

6.22.2010

7 விக்கெட்டில் இலங்கை வெற்றி

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணியுடனான கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்றில் வங்கதேசம் (3 தோல்வி), பாகிஸ்தான் (2 தோல்வி) அணிகள் தோற்று வெளியேறிய நிலையில் தலா 2 வெற்றியுடன் சமநிலை வகித்த இந்தியா, இலங்கை அணிகள் பைனலுக்குத் தகுதி பெற்றன.

இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்தியா & இலங்கை அணிகளிடையே சம்பிரதாயமான கடைசி லீக் ஆட்டம் நேற்று நடந்தது. டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீசியது. கம்பீர் 23, கோஹ்லி 10, கார்த்திக் 40, ரெய்னா 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ரோகித் & கேப்டன் டோனி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்தது. டோனி 41 ரன் எடுத்த நிலையில் 38வது ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார்.அடுத்த ஓவரைத் தொடங்கிய மகரூப் தொடர்ச்சியாக முதல் 3 பந்துகளில் ஜடேஜா, பிரவீன், ஜாகீர் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் என்ற வலுவான நிலையில் இருந்த இந்தியா, மேற்கொண்டு ஒரு ரன் கூட சேர்க்காமல் 4 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் 69 ரன் எடுத்து ரன் அவுட் ஆக, இந்தியா 42.3 ஓவரில் 209 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை பந்துவீச்சில் மகரூப் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய இலங்கை 37.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 211 ரன் எடுத்து வென்றது. தரங்கா 38, தில்ஷன் 24, சங்கக்கரா 73 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜெயவர்தனே 53, கந்தாம்பி 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர்.

6.20.2010

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் நேற்று நடந்த பரபரப்பான போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி முன்னேறியது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றத்த பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது . தொடக்க ஆட்டக்காரர்கள் சல்மான் பட்டும், இம்ரான் பர்ஹத்தும் நிதானமாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.

முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்த நிலையில் பர்ஹத் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சோயிப் மாலிக்கும், சல்மான்பட்டு ஆகியோர் சிறப்பான இலக்கை நோக்கி துடுப்பாடினர் .

144 ஓட்டங்கள் (28.5 ஓவர்) எடுத்திருந்ததை பார்த்த போது பாகிஸ்தான் 290 ரன்களை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 4 ஓவர்களில் மாலிக் (39 ஓட்டங்கள்) சல்மான் பட் (74 ஓட்டங்கள், 85 பந்து, 9 பவுண்டரி), உமர் அமின் (5 ஓட்டங்கள்) ஆகியோர் வெளியேறியதால் பாகிஸ்தான் ஓட்ட வேகம் குறைந்தது. 49.3 ஓவர்களில் 267 ரஓட்டங்களை மட்டுமே பெற்றது பாகிஸ்தான் அணி. அடுத்து 268 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கம்பீரும், ஷேவாக்கும், பாகிஸ்தான் வேக கூட்டணி அக்தர்-ஆமிர் பந்து வீச்சில் தொடக்கத்தில் திணறினார்கள்.

இதை தொடர்ந்து கம்பீருடன், கேப்டன் டோனி ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு உயர்த்தினர். அபாரமாக ஆடிய கம்பீர் அரைசதத்தை கடந்தார்., . இந்திய அணி 49.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 271 ஓட்டங்களை குவித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது.