Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

12.30.2012

இப்படியும் தனிக்குடித்தனம் போவார்களா..?

எமா ஓபராக் என்ற 58 வயதான பெண் ஒருவர் நகர வாழ்க்கையை வெறுத்து யாருமற்ற காட்டுப்பகுதியில் தனியாக ஒரு குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றார்.
கடந்த 13 வருடங்களாக மின்சாரவசதிகள் எதுவுமின்றி இங்கு வாழ்ந்து வந்த எமா தற்போது சுயமாகவே மின்சாரத்தேவை மற்றும் உணவுத்தேவைகளை பூர்த்திசெய்யும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். இதற்கிடையில் இவர் ஒரு ஒக்போர்ட் பல்கலைக்கழகபட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.








11.21.2012

வினோத நோயினால் தொடர்ந்து இரண்டு மாதங்களாக தூங்கும் இளம்பெண்..!

அமெரிக்காவின் பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர் நிக்கோல் டெலீன் (17) என்ற இளம்பெண் தொடர்ந்து 64 நாட்கள் தூங்குகிறார். இவர் கெலீன்-லெவீன் சிண்ட்ரோம் அல்லது ஸ்லீப்பிங் பியூட்டி சிண்ட்ரோம் என்ற தூக்க கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் சிறுவயதில் இருக்கும் போதே இவர் ஒரு நாளைக்கு 19 மணிநேரம் வரை தூங்குவாள் என்று அவரது தாய் கூறுகிறார்.
இதுகுறித்து நிக்கோல் கூறுகையில், இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் என்னால் எந்த ஒரு திருவிழாவும் கொண்டாட முடியாமல் போகின்றது என்று மிகவும் வருதத்ததுடன் கூறுகிறார்.
 
 




மில்லியன் கணக்கில் ரசிகர்களாம் இந்த நாய்க்குட்டிக்கு....!

 உலகில் மிக அழகான நாய்க்குட்டியான 'Poo' மில்லியன் கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ளது.








9.26.2010

டைட்டானிக் மூழ்கியதேன்? கப்பல் அதிகாரியின் பேத்தி தகவல்

டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற ரகசியத்தை வெளியிட்டு உள்ளார் லூயிஸ்பேட்டன் என்பவர். இவர் தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத்து இந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதுதான் அந்த இரகசியம் :

“டைட்டானிக் கப்பலுக்கு முன்னால் பனிக்கட்டி மிதப்பதைக் கண்டுபிடித்து, கப்பலை இடது பக்கமாக திருப்பச் சொன்னார்கள். ஆனால் அதைத் தவறுதலாகப் புரிந்து கொண்டு வலது பக்கமாக திருப்பி விட்டார்கள்.

மேலும் திசை திருப்பும் கருவியும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால்தான் கப்பல் பனிக்கட்டியில் மூழ்கிவிட்டது” என்று அவர் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திலிருந்து அமெரிக்கா சென்ற டைட்டானிக் கப்பல் 100 ஆண்டுகளுக்கு முன் பனிக்கட்டியில் மோதி மூழ்கியது. இதில் 1500 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் உயிர்காக்கும் படகு மூலம் தப்பித்துக் கொண்டனர்.

உயிர் தப்பியவர்களில் சார்ளஸ் மைட்டோலர் என்ற மூத்த கப்பல் அதிகாரியும் ஒருவர். இவருடைய பேத்தி தான் லூயிஸ்பேட்டன். இவர் டைட்டானிக் கப்பல் மூழ்கியது தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.

அதில் டைட்டானிக் கப்பல் ஏன் மூழ்கியது என்ற ரகசியத்தை வெளியிட்டுள்ளார். தனது தாத்தா சொன்ன தகவல்களை வைத்தே இந்த இரகசியத்தை அவர் தனது புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

7.08.2010

ஊழியர்களை குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு

பிரபல சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோ சாப்டிலும், ஊழியர்களை வேலையை விட்டு நீக்கும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், பல முன்னணி நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையை கையாளத் துவங்கியுள்ளன.

பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க துவங்கியுள்ளன.

சிறிய அளவில் ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 5,000 பேரை வேலை நீ்க்கம் செய்தது. இந் நிலையி்ல் இந்த வாரத்தில் மேலும் பலரை நீக்க மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.எத்தனை பேர் நீக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.

ஆனால், அது மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் என்று அந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்ட் கிளைகள் முழுவதிலும் இந்த பணி நீக்கம் அமலாக்கப்படும் என்று தெரிகிறது.

7.07.2010

இரண்டு இலட்சம் யூரோ நாணயங்கள் வீதியில் கொட்டுப்பட்டன.

யூரோ நாணயங்களுடன் சென்ற பாரவண்டியில் ஏற்பட்ட ஓட்டை காரணமாக சுமார் இரண்டு இலட்சம் யூரோ நாணயங்கள் இத்தாலியில் உள்ள விரைவுச் சாலையில் சரிந்து கொட்டுப்பட்டன. பின்னால் வந்த வாகனங்களில் உள்ளோர் நாணயங்களை பொறுக்கும் வேட்டையில் குதித்தனர். இதன் பின்னர் நடாத்திய தேடுதலில் கணிசமான தொகை மீட்கப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 50.000 யூரோ மாயமாய் மறைந்துவிட்டது.

7.03.2010

கணவன் - மனைவி பரஸ்பரம் துரோகமிழைத்தால் சிறை : பிரான்சில் சட்டம்

கணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது.

அதன்படி கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டால் இது குற்றமாகக் கருதப்படும்.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதமும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

சமீப காலமாக பிரான்ஸ்சில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

7.01.2010

பற்சிகிச்சையின் போது எச்.ஐ.வி கிருமி 1800 பேருக்கு தொற்றியது.

அமெரிக்காவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பற்சிகிச்சைக்காக பயன்படுத்திய கருவிகள் சரியான முறையில் சுத்தம் செய்யப்படாத காரணத்தால் சுமார் 1800 பேர் வரை எச்.ஐ.வி கிருமியினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சென்ற் லூயிசில் உள்ள யோன் கோகன் மெடிக்கல் சென்டரில் பற்சிகிச்சை பெற்றவர்களே இத்தகைய பாதிப்பை சந்தித்ததாகவும் அது குறிப்பிட்டுள்ளது. hepatitis B, hepatitis C og hiv ஆகிய கிருமிகளே பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்பட்டால் கடும் சீற்றமடைவார்கள் என்றும், இது பாரதூரமான ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6.30.2010

அமெ​ரிக்​கா​வில் இந்​திய விஞ்​ஞானி கொலை

அமெ​ரிக்​கா​வில் இந்​திய விஞ்​ஞானி ஒரு​வர் மூன்று இளை​ஞர்​க​ளால் தாக்​கப்​பட்டு உயி​ரி​ழந்​துள்​ளார்.​ அ​வ​ரது பெயர் திவ்​யேந்து சின்ஹா ​(49).​ ஐஐடி காரக்​பூர் முன்​னாள் மாண​வர்.​

அமெ​ரிக்​கா​வில் கணினி விஞ்​ஞா​னி​யாக வேலை பார்த்து வந்​தார்.​ ​இந்​நி​லை​யில் வெள்​ளிக்​கி​ழமை,​​ நியூ​ஜெர்​ஸி​யில் உள்ள தனது வீட்​டின் அருகே சின்ஹா,​​ அவ​ரது இரண்டு மகன்​க​ளு​டன் சாலை​யில் நடந்து சென்று கொண்​டி​ருந்​தார்.​ ​÷அப்​போது அங்கு வந்த 17 வயது மதிக்​கத்​தக்க மூன்று இளை​ஞர்​கள் சின்​ஹாவை கண்​மூ​டித்​த​ன​மாக தாக்​கி​யுள்​ள​னர்.​ இதில் பலத்த காய​ம​டைந்த அவர் திங்​கள்​கி​ழமை உயி​ரி​ழந்​தார் என போலீ​ஸôர் தெரி​வித்​த​னர்.​ ​

இந்த சம்​ப​வம் குறித்து கருத்து தெரி​வித்த உள்​ளூர் வழக்​க​றி​ஞர் புரூஸ் கேப்​ளன்,​​ " தாக்​கு​தல் குறித்து விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது;​ இறுதி கட்ட விசா​ர​ணைக்கு பிறகே தாக்​கு​த​லுக்​கான உண்மை கார​ணம் குறித்து தெரி​ய​வ​ரும்' என்​றார்.​ இ​த​னி​டையே,​​ தாக்​கு​த​லுக்கு கார​ண​மான மூன்று இளை​ஞர்​க​ளும் கைது செய்​யப்​பட்டு,​​ அவர்​கள் மீது குற்​றப்​பத்​தி​ரிகை தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

6.22.2010

பறக்கும் மருத்துவமனை

ஆர்பிஸ் என்ற தொண்டு நிறுவனம், உலகம் முழுவதும் கண்பார்வை குறைவை தடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள கண் டாக்டர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, ஒரு விமானத்தையே நவீன வசதிகளுடன் கூடிய கண் மருத்துவமனை பயிற்சி மையமாக மாற்றி உள்ளது. பறக்கும் கண் மருத்துவமனை என அழைக்கப்படும் இது, இப்போது இந்தோனேசியாவின் ஜகர்த்தாவில் உள்ள ஹலிம் விமான நிலையத்தில் நிற்கிறது. அடுத்து மாதம் 9ம் தேதி வரை இங்கு டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கும்.

உலகிலேயே சிறந்த மொழி தமிழ்: ரஷ்ய தமிழ் அறிஞர் தெரிவிப்பு

உலகிலேயே சிறந்த மொழி தமிழ் என்று மாஸ்கோ பல்கலைக்கழக தமிழறிஞர் அலெக்சாண்டர் துபி யான்ஸ்கி கூறினார்.
சென்னையில் உள்ள ரஷ்யன் அறிவியல் மற்றும் கலாசார மையத்தில் அவர் நேற்று அளித்த பேட்டி:

உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டில் பல் வேறு நாட்டு தமிழ் அறிஞர், தமிழ் ஆர்வலர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர். எனக்கும் அழைப்பு வந்தது. தமிழ் மீது எனக்குள்ள ஆர்வம் காரணமாக மா நாட்டில் கலந்து கொள்வ தற்காக நான் வந்துள்ளேன். தமிழகத்திற்கு நான் வருவது 15வது முறை. இந்த மா நாட்டால் தமிழுக்கு பெருமை. தமிழ் மீது உள்ள மதிப்பு, மரியாதையால் மாநாட்டில் ஆயிரக்கணக் கில் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். தமிழ் உலக மொழிகளில் சிறந்த மொழி. தமிழை மேலும் வளர்க்க வேண்டும்.

உலகத் தமிழ்ச் செம் மொழி மாநாட்டில் தொல் காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க உள்ளேன். அவர்கள் அதனை நூலாக வெளியிடப் போகிறார்கள். தமிழுக்கு நல்ல தன்மை உண்டு. தமிழை வளர்க்க நான் பாடுபடுவேன். தமிழ் மொழிக்கும், ரஷ்யா மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரஷ்யா வில் தமிழை கற்பிக்கும், கற்கும் மரபு வளர்கிறது. மாஸ்கோ பல்கலைக்கழகத் தில் தமிழ் வகுப்புகள் உள்ளன. 5 மாணவர்கள் தமிழ் படிக்கின்றனர். அந்த மாணவர்கள் தமிழை கற்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளனர். அதற்காக, சென்னை பல்கலை.யில் அந்த மாணவர்கள் தமிழை கற்பதற்காக துணை வேந்தர் திருவாசகத்திடம் பேசி யிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா & ரஷ்யா வர்த்தக சபையின் தலைவர் லட்சுமிநாராயணன், பொதுச்செயலாளர் தேனப்பன் ரஷ்யா மொழி கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டேட்டியான பெரேவா, எழுத்தாளர் ஜெயகாந்தன் மற்றும் மாநாட்டுக்கு வந்துள்ள மாஸ்கோ பல்கலை. மாணவி ஆகியோர் உடன் இருந்தனர்.

6.21.2010

4 ஆண்டுக்குப் பின் அதிசயம்: தாய், மகனை இணைத்தது பேஸ்புக் இணையதளம்

சமூக இணையதளமான பேஸ்புக், பொழுதை போக்குவதற்கானது என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் அதையும் தாண்டி பல நன்மைகளை செய்து வருகிறது. ஆம், 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த தாய், மகனை மீண்டும் இணைத்துள்ளது பேஸ்புக்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜோசப் வகுவெரா, லொரெனா பெரஸ் தம்பதி. இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2006ம் ஆண்டில் மனைவியை விட்டு பிரிந்து விட்டார் ஜோசப். உடன் மனைவியின் அனுமதியின்றி மகன் இசையா ஜெரமையா வகுவெராவையும் அழைத்துச் சென்று விட்டார். எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில், தனது மகனை காணவில்லை என கணவர் மற்றும் மகன் போட்டோவுடன் பேஸ்புக்கில் பெரஸ் விளம்பரப்படுத்தி இருந்தார்.

இதைப் பார்த்த ஜோசப்பின் முன்னாள் காதலி, இசையா இருப்பிடம் குறித்து போலிசில் தகவல் கொடுத்தார். போலிசார் உதவியுடன் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மகன் இசையாவை பெரஸ் கண்டுபிடித்தார். ‘‘மகனை சந்தித்தபோது ஆனந்த கண்ணீர் விட்டேன். அவன் என்னை கட்டித் தழுவி, அம்மா எனக்கு சாப்பாடு வேண்டும் என்றான்’’ என பெரஸ் தெரிவித்தார்.தாயையும் மகனையும் சேர்த்து வைப்பதற்கு உதவிய ஹாரிஸ் பகுதி மாவட்ட வழக்கறிஞர், கூறுகையில், ‘‘தம்பதிக்குள் ஏற்படும் பிரச்னையில் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பிரிக்கக்கூடாது’’ என்றார்.

சாதாரண குடிமகனை மணந்த சுவீடன் இளவரசி

சுவீடன் நாட்டின் மன்னர் கார்ல் 16-வது கஸ்டாப் (64), ராணி சில்வியா (66) ஆகியோரின் மூத்த மகள் விக்டோரியா (32). இவர் டேனியல் வெஸ்ட்லிங் (36) என்பவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

டேனியல் ஒரு சாதாரண குடிமகன் ஆவார். உடற்பயிற்சி கற்றுத்தரும் பயிற்சியாளர். இவர் இளவரசி விக்டோரியாவுக்கு உடற்பயிற்சி கலையை கற்றுத்தர நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இதற்கு முதலில் எதிர்ப்பு கிளம்பியது.

இவர்கள் திருமணத்துக்கு இளவரசி விக்டோரியாவின் பெற்றொர் திடீரென சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டாக் ஹோமில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு திருமணம் நடந்தது.

இதில், இளவரசி விக்டோரியாவின் பெற்றொர், அவரது சகோதரிகள் கார்ல் பிலிப் (31), மாடலின் (28) மற்றும் நார்வே, டென்மார்க் நாடுகளின் இளவரசர்கள் மற்றும் இளவரசிகள் கலந்து கொண்டனர்.

சாதாரண குடிமகனை திருமணம் செய்து கொண்ட விக்டோரியா அடுத்து முடிசூட போகும் பட்டத்து இளவரசி ஆவார்.