Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

11.21.2012

முஸ்லிம்களை மோசமாக சித்தரிக்கும் விஸ்வரூபம்! சர்ச்சையில் சிக்கியுள்ள கமல் வைத்தியசாலையில் அனுமதி

முஸ்லிம் சமூகத்தை மோசமாக சித்தரிக்கும் ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளால் கமலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுப்புது தொழில் நுட்பங்களோடு விஸ்வரூபம் படத்தை இயக்கி, தயாரித்துள்ள கமல், அதனை வெளியிடுவதில் சிக்கலை எதிர் கொண்டுள்ளார்.
தலிபான் போராளிககளும் தலிபான்- அமெரிக்காவுக்கு இடையே நடந்த ஆப்கான் போரும் கதையின் மையமாகியிருப்பதால் முஸ்லிம்களை கமல் மோசமானவர்களாக சித்தரித்திருக்கிறார் – அவரது இப்படத்தில் இஸ்லாம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.

இஸ்லாமிய அறிஞர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் “விஸ்வரூபம்´ படத்தை போட்டுக் காட்ட வேண்டும். அதில் ஆட்சேபகரமான காட்சிகள் இருப்பது தெரிய வந்தால் அதை நீக்கிய பிறகே படத்தை வெளியிட வேண்டும் என தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோரியுள்ளது.

இந்நிலையில் விஸ்வரூபம் படத்தினால் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலால் கமலுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளன.

ஆனால் அது வதந்தி என்றும் கமல் மிகுந்த ஆரோக்கியத்துடன் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தின் பிரிமியர் ஷோவை அமெரிக்காவில் வெளியிடும் வேலைகளிலும் ஹாலிவுட்டில் படம் பண்ணுவது பற்றிய முன்னோட்டத்திலும் பிஸியாக இருப்பதாகவும் கமல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




8.09.2012

நடிகைகளுக்கு குடி பழக்கம் இருப்பது உண்மை: சனாகான்

சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சனாகான். இவர் இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

சனாகான் சமீபத்தில் இந்தி நடிகைகளைவிட தென்னிந்திய நடிகைகள் மது, சிகரெட் பழக்கத்துக்கு அதிகமாக அடிமையாகி உள்ளனர் என்று பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

மும்பை நட்சத்திர ஓட்டல்களில் தென்னிந்திய நடிகைகள் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு தள்ளாடிப் போவதை பார்த்து இருக்கிறேன். எனக்கு அதுபோன்ற பழக்கம் எதுவும் கிடையாது, என்றும் கூறியிருந்தார்.

சனாவின் இந்த பேட்டிக்கு நடிகைகள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சனா கானை கண்டித்து பேட்டியளித்தனர். எச்சரிக்கையும் விடுத்தார்கள்.

இந்நிலையில் சனாகான் மீண்டும் தனது கருத்தை வலியுறுத்தி பேட்டியளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், நான் தவறாக எதையும் பேசிவிடவில்லை. மது, புகை பழக்கம் உள்ள நடிகைகள் பற்றிய உண்மையைதான் சொன்னேன்.

இன்றும் நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் மது கிளாசை கையில் வைத்திருப்பது போன்ற படங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்த பழக்கத்தை அவர்கள் விட்டு விடாமல் மாறாக என் மீது பாய்வது முறையல்ல என்றும் நடிகைகள் பற்றி நான் சொன்ன கருத்தில் இருந்து ஒருபோதும் மாறமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டமாக குழந்தைகளை தத்தெடுத்தார் ஹன்சிகா

கொலிவுட் நடிகை ஹன்சிகா, தனது பிறந்த நாளான இன்று குழந்தைகள் இருவரை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்பு செலவுகளை கவனிக்க உள்ளார்.

கொலிவுட்டில் எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஹன்சிகா.

ஆரம்பத்தில் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற தற்போது கொலிவுட் நடிகைகளில் நட்சத்திர வரிசையில் ஹன்சிகாவும் உள்ளார்.

இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹன்சிகா, ஏதாவது சமூக அக்கறையுள்ள விடயத்தை செய்யவேண்டுமென நினைத்து குடிசை பகுதிகளில் வசிக்கும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.

இவர்களுக்கான படிப்பு, மருத்துவம், அன்றாட தேவைகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் இவரே கவனிக்க உள்ளார்.

இன்று மாலை தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டியும் தனது பிறந்தநாளை ஹன்சிகா கொண்டாட உள்ளார்.

10.26.2010

நான் அரசியல் பிரவேசம் செய்வது ஆண்டவன் கையில் உள்ளது-ரஜினிகாந்த்

என்னை இந்த உயரத்தில் தூக்கி வைத்த தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் பெருமை தரும் விஷயத்தைச் செய்வேன் என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

அதேபோல தான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

சனிக்கிழமை மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 40 வது ஆண்டு விழாவில் அவர் இதைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு இயக்குநரும் தாங்கள் அறிமுகப்படுத்திய மாணவரிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தது போல அமைந்தது குரு கே.பாலச்சந்தர் – மாணவர் ரஜினி நேர்காணல் ஜடூஸ .

நிகழ்ச்சியை கே.பி இப்படி ஆரம்பித்தார்:

“ரஜினி இன்றைக்கு உலக சினிமாவுக்குப் போய்விட்டார். இந்திய சினிமாவின் உச்ச நடிகர். எவ்வளவோ வளர்ந்து விட்ட நிலையிலும் இன்றும் எனக்கு அவர் மாணவன்தான். என்னை எப்போதும் குருவாகவே மதிக்கிறார். அவரிடம் கேட்க ஏராளமான கேள்விகளை வைத்திருக்கிறேன். இந்த விழா மேடையில் கேட்டுவிடப் போகிறேன்… இந்த மேடையைப் பொறுத்தவரை என்னை குருன்னு நினைக்காம ஒரு பிரஸ்காரனா அவர் நெனச்சிக்க வேண்டியதுதான். அவருக்கு பதில் சொல்ல தயக்கமா இருக்கிற கேள்விகளுக்கு தாராளமா நோ கமெண்ட்ஸ்னு சொல்லிடலாம்…”

கேபியின் கேள்விகளும் ரஜினி தந்த பதில்களும்:

கேபி: எந்திரனுக்குப் பிறகுஇ நினைத்துப் பார்க்க முடியாத பெரிய உயரத்தில் நீ இருக்கிறாய். இப்போ மீண்டும் உன்னால் பழைய சிவாஜி ராவாக முடியுமா?

ரஜினி: நான் இன்னும் சிவாஜி ராவாகவே இருக்கிறதாலதான் ரஜினிகாந்த்தா இருக்க முடியுது. இந்த பேர்இ புகழெல்லாம் சிவாஜி ராவை பாதிக்கவில்லை!

கேபி: இன்னைக்கு உன்னால நினைச்சமாதிரி எங்கும் போக முடியாது. ஊரில் உள்ள சரவண பவனையெல்லாம் விலைக்கு வாங்கும் அளவுக்கு நீ இருந்தாலும்இ அதே ஹோட்டலில் போய் உன்னால உட்கார்ந்து சாப்பிட முடியாது. நடிகரான பிறகு நிறைய இழந்துட்டோமேங்கிற வருத்தம் உண்டா?

ரஜினி: சாதாரண மனிதர்களைப் போல எனக்கும் ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வர ஆசை உண்டு. அந்த சந்தோஷத்தை இழந்துவிட்டேன். சில நேரங்கள்ல நிம்மதியை இழந்திருக்கிறேன். சூழ்நிலை கைதியாக இருக்க வேண்டியும் உள்ளது. இவைகளை தியாகம் செய்துதான் இந்தப் புகழை அடைந்திருக்கிறேன்.

கேபி: உன்னோட வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதலாமே…?

ரஜினி: சுயசரிதை எழுதினால் உண்மைகளை மறைக்காமல் அதில் குறிப்பிடவேண்டும். நான் உண்மைகளை அப்படியே எழுதினால் நிறைய பேர் மனசு கஷ்டப்படும். மகாத்மா காந்தியிடம் சுயசரிதை எழுதுவதற்கு தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் எனக்கும் வரும்போது எழுதுவேன்.

கேபி: உன்னை தூக்கி வைத்துள்ள சினிமாவுக்கு என்ன செய்யப் போகிறாய்?

ரஜினி: நிச்சயம் நல்லது செய்வேன். தமிழர்களும்இ தமிழ் சினிமாவும் பெருமைப் படுகிற மாதிரி ஒண்ணை நிச்சயம் செய்வேன் (விசில் – கைதட்டல் பறக்கிறது).

கேபி: இன்னிக்கு நீதான் இந்தியாவின் உச்ச நட்சத்திரம். வட இந்திய மீடியாவே சொல்லுது. டிவியில பார்த்தேன். இந்த நிலையை தக்க வைக்க என்ன பண்ணப் போறே?

ரஜினி: இதை எதிர்ப்பார்த்து நான் எதையும் செய்யல. அதனால காப்பாத்திக்கவும் முயற்சி பண்ணலை. நான் என் வேலையை செய்துட்டு இருக்கேன். இப்போ இருக்கிற நிலை ஒரு எந்திரனால மட்டும் வந்ததில்லை. அதுக்கு முன்ன நான் பண்ண நிறைய படங்களும் காரணம். அதேநேரம்இ இந்த நிலையை எப்படி தக்க வச்சிக்கப் போறோம்ங்கிற பயம் இருக்கத்தான் செய்யுது.

கேபி: சில்வர்ஸ்டர் ஸ்டெலோன் மாதிரி ஒரு ஒன்மேன் ஆர்மி நீ. உன்னோட பன்முகப் பரிமாணத்தைக் காட்டும் அளவு படம் எடுக்க இனி யாராலும் முடியாதுன்னு நினைக்கிறேன். நீயே ஏன் ஒரு படத்தை இயக்கக் கூடாது?

ரஜினி: படங்களை டைரக்டு செய்யற ஐடியா எதுவுமில்லை. அது எனக்குத் தெரியாதது. நிறைய பொறுப்புமிக்கது.

கேபி: ஒருவேளை நீ படம் டைரக்ட் பண்ணா என்னை உதவியாளரா சேர்த்துக்குவியா?

ரஜினி: நிச்சயம் உங்களை உட்கார வச்சி வணங்கிஇ நீங்க சொல்ற வேலையை செய்வேன்.

கே பி: இதுவரை எத்தனை படங்கள் நடிச்சிருப்பே?

ரஜினி: (சற்றும் யோசிக்காமல்) 154 படங்களில் நடித்துள்ளேன்.

கேபி: இந்தப் படங்களில் நாம நடிக்காம போயிட்டோமேன்னு நினைச்சுதுண்டா..?

ரஜினி: ஓரிரு படங்கள் உண்டு.

கேபி: என்னென்ன படங்கள்னு சொல்ல முடியுமா?

ரஜினி: இல்லே… இப்போ சொல்றது சரியா இருக்காது. நான் சொல்லவும் விரும்பல.

கேபி: வீரபாண்டிய கட்ட பொம்மன்இ எங்க வீட்டுப்பிள்ளை போன்ற பல படங்கள் இப்போதும் பேசப்படுகிறது. அதுபோல் 50 ஆண்டுகளை தாண்டியும் நிற்கிற உன்னோட படங்கள்ன்னு எதைச் சொல்லுவே?

ரஜினி: ராகவேந்திராஇ பாட்ஷாஇ எந்திரன்.

கேபி: நீ மிகச் சிறந்த நடிகன். ஆனா தேசிய விருது கிடைக்கலேன்னு ரசிகர்களைப் போலவே எங்களுக்கும் ஏக்கம் உண்டு. எப்போது தேசிய விருது பெறுவாய்?

ரஜினி: அது டைரக்டர் கையில் இருக்கு!

கேபி: நாடகங்களில் நடிக்கணும் என்ற ஆர்வம் உனக்கு உண்டு. நீயே பல முறை சொல்லியிருக்கே. இப்போது நாடகங்கள் போட்டால் நடிப்பியா?

ரஜினி: கண்டிப்பா நடிப்பேன்.

கேபி: மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை ஏப்ரல் 15-ந் தேதி போடப்போறேன். அதில் நடிப்பியா?

ரஜினி: நீங்க சொன்னாஇ நீங்க டைரக்ட் பண்ணாஇ நானும் நடிக்கிறேன்.

கேபி: சினிமாவுக்கு வந்த புதிதில் சிகரெட்டை தூக்கி போட்டு ஸ்டைல் காட்டினே. சிகரெட்டும் அதிகமா பிடிப்பே. இப்போ குறைச்சிட்டியா?

ரஜினி: சிகரெட் பிடிப்பதை இப்போது நிறையவே குறைச்சிட்டேன்.

கேபி: சரி.. நான் இயக்கிய படங்களில் உனக்குப் பிடிச்ச படங்கள் என்னென்ன?

ரஜினி: 2 படங்கள் ரொம்ப பிடிக்கும். ஒண்ணுஇ அவள் ஒரு தொடர்கதை. அதை 8 முறை பார்த்தேன். இன்னொன்னு அரங்கேற்றம். 12 தடவை பார்த்தேன்.

கேபி: அரசியலில் உனக்குப் பிடித்த தலைவர் யார்?

ரஜினி: லீ குவான் யூ. நவீன சிங்கப்பூரை உருவாக்கிய தலைவர்.

கேபி: வாழ்க்கையில யாரையாவது பார்த்து பொறாமைப் பட்டிருக்கியா?

பதில்: இமயமலையில் உள்ள துறவிகளைப் பார்த்து ரொம்ப பொறாமைப் பட்டிருக்கிறேன்.

கேபி: உனக்குப் பிடிச்ச இயக்குனர் ஜடூஸ யார்… தயங்காம சொல்லு!

ரஜினி: மகேந்திரன்.

கேபி: நீ விரும்பிச் சாப்பிடற உணவு ஜடூஸ எது?

ரஜினி: சிக்கன்.

கேபி: வாழ்க்கையில் நீ நட்புக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பது எல்லோருக்கும் தெரியும். உனக்கு நெருங்கிய நண்பர் யார்?

ரஜினி: ராவ்பகதூர்.

கேபி: என்கிட்டே உனக்குப் பிடிக்காத விஷயம் எது?

ரஜினி: நீங்கள் கோபப்படுவதைக் குறைச்சிக்கணும்!

கேபி: எல்லோரும் கேட்கணும்னு நினைக்கிற கேள்வி இது. நீ அரசியலுக்கு வருவியா மாட்டியா?

ரஜினி: அது அந்த ஆண்டவன் கையில் இருக்கு!

7.05.2010

உலகக் கோப்பையை வெல்லத் தயாராகும் ஐரோப்பிய அணிகள்

ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் கோப்பையை வென்றதில்லை என்ற இழுக்குடன் இருக்கும் ஐரோப்பிய அணிகள், இந்த முறை அதை வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.

இதுவரை நடந்துள்ள 18 (தென் ஆப்பிரிக்காவை சேர்க்காமல்) உலகக் கோப்பைப் போட்டிகளில் ஐரோப்பிய கண்டத்தில் நடந்த போட்டிகளில் ஐரோப்பிய அணி எதுவும் வெற்றி பெற்று கோப்பையை வென்றதில்லை. இது வலுவான ஐரோப்பிய அணிகளுக்கு பெரும் இழுக்காக இருந்து வருகிறது. ஆனால் அதற்கு இப்போது விடிவு காலம் பிறக்கவுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வரும் 16வது உலகக் கோப்பை போட்டித்தொடரின் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ள நான்கு அணிகளில் உருகுவே மட்டும்தான் தென் அமெரிக்க அணியாகும். மற்ற மூன்றும் ஐரோப்பிய அணிகளாகும். எனவே இறுதிப் போட்டிக்கு இரண்டு ஐரோப்பிய அணிகள் முன்னேறினால் இழுபறி கோப்பை ஐரோப்பாவின் வசமாகும் வாய்ப்பு உறுதியாகும்.

ஜெர்மனி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு தறபோது அதிகரித்து வருகிறது. அடுத்து ஸ்பெயின் அணி மீது அதிக நம்பிக்கை உள்ளது. உருகுவே, நெதர்லாந்து ஆகியவற்றுக்கு சமமான அளவில் ஆதரவு காணப்படுகிறது. இருப்பினும் உருகுவே அணி கோப்பையை வெல்வது கடினம் என்று பொதுவான கருத்து காணப்படுகிறது.

தற்போதைய நிலையில் ஜெர்மனி மிகவும் வலுவாக உள்ளதால் அந்த அணிக்கே இந்த முறை கோப்பை என்பது கால்பந்து ரசிகர்களின் வலுவான நம்பிக்கையாக உள்ளது.

கடந்த முறை நடந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஐரோப்பாவைச் சேர்ந்த பிரான்ஸும், இத்தாலியும் மோதின. இந்த முறை உருகுவே தோற்கடிக்கப்பட்டால், தொடர்ந்து 2வது முறையாக ஐரோப்பிய அணிகள் மோதும் இறுதிப் போட்டியாக அது அமையும்.

நடப்பு உலகக் கோப்பைப் போட்டித் தொடரின் சுற்றுப் போட்டிகளில் 13 ஐரோப்பிய அணிகளில் 7 வெளியேற்றப்பட்டன. அதேசமயம், ஐந்து தென் அமெரிக்க அணிகளும் தோல்வியே அடையாமல் நாக் அவுட் ரவுண்டுக்கு முன்னேறின.

நாக் அவுட் ரவுண்டில் உருகுவேயைத் தவிர அனைத்து தென் அமெரிக்க அணிகளும் தோற்றுப் போய் விட்டன. அதேசமயம், ஐரோப்பிய அணிகள், உலகின் அனைத்துப் பகுதி அணிகளையும் வென்று அரை இறுதிக்குள் வந்துள்ளன.

கடந்த 19070ம் ஆண்டுக்குப் பின்னர் 2002ல்தான் அரைஇறுதியில் 3 ஐரோப்பிய அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. அதன் பிறகு இப்போதுதான் 3 அணிகள் அரை இறுதிக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த முறையும் ஐரோப்பாவுக்கே கோப்பை. அதுவும்,ஐரோப்பிய கண்டத்துக்கு வெளியே வெல்லப்படும் முதல் கோப்பையாக இது அமையும் என ஐரோப்பிய ரசிகர்கள் குஷியுடன் உள்ளனர்.

7.04.2010

சினிமாவில் குதிக்கிறார் கனிமொழி!

முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி ஒரு திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

முதல்வர் கருணாநிதியின் குடும்பம் அரசியல் மட்டுமல்லாமல் கலையுடன் பிறந்த குடும்பமுமாகும். கருணாநிதியே ஒரு கலை பிதாமகராக இருக்கிறார். அவரைத் தொடர்நது மூத்த மகன் மு.க.முத்து நடிகராக இருந்தார். முத்துவின் மகன் இப்போது பாடகராக, நடிகராக மாறி வருகிறார்.

அதேபோல மு.க.ஸ்டாலின் சினிமாவில் நடித்துள்ளார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பிசியான தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

மத்திய அமைச்சராக உள்ள மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் தயாரிப்பாளராக இருக்கிறார். மு.க.தமிழரசுவின் மகன் ஹீரோவாகியுள்ளார். இதன் மூலம் தமிழரசும் தயாரிப்பாளராகியுள்ளார்.

இந்த நிலையில், மகள் கனிமொழியும் இப்போது திரைத் துறைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. படம் ஒன்ற அவர் தயாரிக்கவுள்ளதாக கனிமொழிக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் இயக்குநர் , நடிகர், நடிகையர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தெரியவில்லை. அதுதொடர்பான விவாதம் நடந்து வருவதாக தெரிகிறது. இந்தப் படம் பிரமாண்டமானதாக இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

7.03.2010

அம்மாவுக்கு நோ; தங்கைக்கு யெஸ்

"விடியல்',"பாவனி ஐ.பி.எஸ்', "முரட்டுக் காளை', "அறுவடை', "நூற்றுக்கு நூறு', மலையாளத்தில் "ஷிகார்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சினேகா. மலையாளத்தில் மம்முட்டியுடன் மூன்று படங்களில் ஜோடி சேர்ந்து விட்ட நிலையில், இப்போதுதான் மோகன்லாலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது இந்த படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகையான அனன்யாவுக்கு அம்மாவாக சினேகா நடிக்கிறார் என செய்திகள் கிளம்ப, ""அம்மாவாக நடிக்க வேண்டிய அவசியமில்லை. அனன்யா கேரக்டரும் என் கேரக்டரும் வெவ்வேறு நேரங்களில் வருகிறது. அம்மா மகளாக வரும் காட்சிகள் ஒன்று கூட இல்லை'' என சமீபத்தில் விளக்கமளித்தார். இந்நிலையில் தியாகராஜன் இயக்கத்தில், முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகி வரும் "பொன்னர் சங்கர்' படத்தில் பிரசாந்தின் தங்கையாக நடிக்கிறார் சினேகா.

23வது ஜேம்ஸ் பான்ட் படம் கைவிடப்பட்டது

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 23வது ஜேம்ஸ் பான்ட் படம் கைவிடப்பட்டுள்ளது. இந்தப் படம் மீண்டும் படப்பிடிப்புக்குச் செல்ல நீண்ட காலமாகும் எனவும் கூறப்படுகிறது.

ஜேம்ஸ் பான்ட் வேடத்தில் டேணியல் கிரேக் 3வது முறையாக நடிக்கும், 23வது ஜேம்ஸ் பான்ட் படம் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், படத்தைத் தயாரிக்கும் எம்ஜிஎம் நிறுவனம் நிதிப் பிரச்சினையில் தள்ளாடி வருவதால் படத்தயாரிப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்தற்போது படத்தையே ரத்து செய்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பான்ட் படத் தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒருவர் கூறுகையில், பான்ட் படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக் குழுவினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. போதிய நிதியில்லாததே இதற்குக் காரணம் என்றார்.

சாம் மென்டிஸ் இப்படத்தை இயக்குவதாக இருந்தது. தற்போது படம் கைவிடப்பட்டுள்ளதால் மீண்டும் இது எப்போது தொடங்கப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் நெடு நாட்களாகும் என்று கூறுகிறார்கள்.

எம்ஜிஎம் நிறுவனம் 3.7 பில்லியன் டாலர் கடனில் மூழ்கியுள்ளதாம்.

கமல் பாணியில் பாலாஜி சக்திவேல்!

‘சாமுராய்’, ‘காதல்’, ‘கல்லூரி’ படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். அடுத்து லிங்குசாமி தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் முன்பே தொடங்க இருந்தது. ஆனால் தாமதம் ஆகி வருகிறது. இது பற்றி பட யூனிட்டாரிடம் கேட்டபோது, ‘படத்தில் எல்லா கேரக்டர்களுமே புதுமுகங்கள்தான். அவர்களுக்கு பட காட்சிகளில் நடிக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனால்தான் தாமதம் ஆனது. இந்த பயிற்சி பட்டறை இப்போது முடியும் நிலையில் உள்ளது. அது முடிந்ததும் ஷூட்டிங் தொடங்கும். 60 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படும்’ என பட வட்டாரங்கள் தெரிவித்தன. ‘சமீபத்தில் ‘மன்மதன் அம்பு’ படத்துக்காக நடிகர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தினார் கமல்ஹாசன். அதே பாணியில் இப்படத்துக்கும் முழுமையாக பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதனால் ஷூட்டிங்கில் வேலை சுலபமாகும்’ என கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவித்தன.

7.02.2010

உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துவிட்டு கால்மணிநேரம் அழுத நடிகை

ஹீரோவின் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்ததற்காக கால்மணி நேரம் அழுதுவிட்டு, பின்னர் அதே காட்சி சிறப்பாக வந்திருப்பதைப் பார்த்து அரை மணி நேரம் ஆனந்தமாக ஒரு நடிகை சிரித்ததை முன்னெப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா…. இல்லாவிட்டால் இதோ வித்யா!

வித்யா? ஆம்.. இவர்தான் அந்த ஹீரோயின். புதுமுகம்தான் என்றாலும் பழகிய முகமாக மனதில் பதியும் அளவு இயல்பான இளம்பெண். ஆறாவது வனம் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் வித்யா.


கதையில் இப்படி ஒரு காட்சி:வித்யாவின் தாய்மாமன் போஸ் வெங்கட்டைக் கொல்ல வெறியோடு அவர்களின் கிராமத்துக்கே வருகிறார் ஹீரோ. அதாவது வித்யாவின் காதலன் இவர். அங்கே போஸ் வெங்கட்டும் சற்றுத் தள்ளி வித்யாவும் நிற்கிறார்கள். ஹீரோ அதாவது காதலன் தன்னைத்தான் பார்க்க வந்திருப்பதாக முதலில் தவறாக எண்ணிக் கொள்கிறாள் வித்யா. ஆனால் காதலன் கண்களில் தெரியும் கொலைவெறி, அவனைப் பார்த்து மிரட்சியுடன் நிற்கும் தாய்மாமன் ஆகியோரைப் பார்த்ததும் விஷயம் வித்யாவுக்கு விஷயம் புரிந்து விடுகிறது. அவளுக்கு காதலன் மேல் உள்ள காதலையும் காட்ட வேண்டும்… தாய்மாமனை காதலனின் கொலைவெறியிலிருந்தும் காக்க வேண்டும்…

என்ன செய்வாள்… சட்டென்று அந்த முடிவுக்கு வருகிறார். யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஓடிப்போய் காதலனின் உதட்டோடு உதடு பதித்து நச் நச்சென்று முத்தம் கொடுக்கிறாள். அந்த முத்தத்தின் இதத்தில் மெல்ல மெல்ல காதலனின் கொலை வெறி அடங்கி, கண்களில் சாந்தம் தவழ்கிறது. தாயமாமனும் தப்பிக்கிறான்.

இந்தக் காட்சி ஆனை மலைக்கு அருகில் உள்ள டாப் ஸிலிப் பகுதியில் படமானது. கிட்டத்தட்ட 2000 பொதுமக்கள் சூழ்ந்து நிற்க, இந்தக் காட்சி படமாக்கப்பட்டது. இந்தக் காட்சியில் முதலில் நடிக்க மறுத்து பெரும் ஆர்ப்பாட்டம் செய்தார் ஹீரோயின் வித்யா. புதுமுகம் வேறு. எனவே இயக்குநர் புவனேஷ், ஹீரோயினின் பெற்றோரை நாடி விஷயத்தைச் சொன்னார். அவர்களும் மகளை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தனர். ஒருவழியாக சமாதானமாகி முத்தமும் கொடுத்து முடித்த வித்யா, பின்னர் நடந்ததை எண்ணி கதறி கதறி அழுதார். இப்படி முத்தம் கொடுக்க வைத்து விட்டார்களே என கால்மணி நேரம் புலம்பினார். உடனே, அவரை அழைத்த இயக்குநர், காட்சிகளை போட்டுக் காட்டினார். அவற்றைப் பார்த்தபிறகு வித்யாவின் முகத்தில் அரும்பிய புன்னகை, பெரும் சிரிப்பாக மாறியது. கிட்டத்தட்ட அரைமணி நேரம் மனம் விட்டு விட்டுச் சிரித்த வித்யா, தான் தவறாகப் புரிந்து கொண்டதாக இயக்குநரிடம் கூறி சமாதானமானார்.

ஆறாவது வனம் படம் பொள்ளாச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாகியுள்ளது. மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு மிகவும் சோதனைக் களமாக அமைந்தது ஆறாவது வனத்தில் அவர்கள் அஞ்ஞாத வாசம் புரிந்த காலகட்டம்தான். அதேபோல காதலில் மிகுந்த சோதனைகளை காதலனும் காதலியும் எதிர்நோக்கும் காலகட்டத்தைச் சித்தரிப்பது இந்த ஆறாவது வனம். ஆறாவது வனத்தின் நாயகனாக பூஷன் நடிக்கிறார். நாயகியாக கேரளாவைச் சேர்ந்த வித்யா அறிமுகமாகிறார். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் புவனேஷ். எம்பிஜி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிப்பவர் எஸ்எம் தியாகராஜன்.

இசையமைப்பாளராக ஹரிபாபு அறிமுகமாகிறார். ஹாலிவுட்டில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சியான் எடிட்டராக அறிமுகமாகிறார்.

அஜீத்தின் 50வது படத்தில் அனுஷ்கா

அஜீத்தின் ஐம்பதாவது படம் தற்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. கெளதம் இயக்கப்போவதாக இருந்த இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இயக்குநர் கெளதமுக்கும் அஜீத்திற்கு ஒத்துவராமல் போனதால் அந்தப்படம் இழுபறியாகவே இருந்தது.

இந்த இழுபறி தற்போது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. வெங்கட் பிரபுவை இந்த படத்திற்கு இயக்குநராக்கியிருக்கிறார் அஜீத், இப்படத்திற்கு 'மங்காத்தா' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.

அஜீத்திற்கு ஜோடியாக அனுஷ்காவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். முதலில் சமந்தா கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. இயக்குநர் மாறியதால் படத்தின் நாயகியும் மாறிவிட்டார்.

சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அனுஷ்காவிற்கு பெரிய ஹுரோக்களுடன் நடிக்க வாய்ப்பு குவிகிறதாம். (டிஎன்எஸ்)

6.25.2010

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம நாராயணன் கே ஆர்ஜி மோதுகிறார்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராம.நாராயணனும், கே.ஆர்.ஜியும் மோதுகிறார்கள்.

இதற்கான வேட்பு மனுவை கே ஆர்ஜி நேற்று தாக்கல் செய்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அடுத்த மாதம் (ஜுலை) 11-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள். ஜுலை 11-ந் தேதி ஓட்டுப்பதிவு.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ராம.நாராயணனை எதிர்த்து, கே.ஆர்.ஜி. போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை நேற்று மாலை தாக்கல் செய்தார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஏற்கெனவே 8 ஆண்டுகள் தலைவராக இருந்தவர் கே.ஆர்.ஜி. தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவராக 4 ஆண்டுகள் பதவி வகித்தவர்.

ராம.நாராயணன் ஏற்கனவே 2 முறை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்து வருகிறார். முதலில் இந்தத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எண்ணமில்லை என்று கூறிவந்தார். ஆனால் தனது முடிவை மாற்றிக் கொண்டு இப்போது 3-வது முறையாக இந்த தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.

இதுகுறித்து ராம நாராயணன் கூறுகையில், “ஒட்டு மொத்த திரையுலகின் நலன் கருதியும், அனைவரின் வேண்டுகோளுக்கிணங்கவும் இந்த முறையும் தேர்தலில் நிற்கிறேன். என்னைப் பற்றி கவுன்சில் உறுப்பினர்களுக்குத் தெரியும்…” என்றார்.

சிறு படத் தயாரிப்பாளர்களுக்காக…

தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து கேஆர்ஜி கூறுகையில், “பதவி ஆசையால் நான் போட்டியிடவில்லை. சிறிய படத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற இப்போது களமிறங்குவது முக்கியமானதாக உள்ளது” என்றார்.

சிரிக்க வைத்த கார்த்தி!

சூர்யாவிடம் இல்லாத பல விஷயங்கள் இருக்கிறது அவரது இளவல் கார்த்தியிடம்! பொய்யில்லாத சிரிப்பு, புரட்டில்லாத பேச்சு என்று அந்த 'வெரிகுட் விஷயங்களை' அடுக்கிக் கொண்டே போகலாம்.

நேற்று நடந்த 'நான் மகான் அல்ல' பிரஸ்மீட்டில் கூட கார்த்தியின் இயல்பான பேச்சில் ஒரு சினேகிதனின் மென்மை!

'மௌன ராகம் படத்தில் கார்த்திக் சார் பண்ணியது மாதிரி ஒரு கேரக்டர் இது என்று பெரும்பாலான இயக்குனர்கள் சொல்லுவாங்க. ஆனால் அந்த இடத்தை இதுவரைக்கும் யாரும் நிரப்பியதா தெரியல. இந்த படத்தில் நீங்க அந்த மௌன ராகம் கார்த்திக்கை பார்க்கலாம். இன்னம் 25 வருஷம் கழிச்சு அவரு தான் நடிச்ச படங்களை திரும்ப நினைச்சு பார்த்தார்னா அதில கட்டாயம் இந்த படமும் இருக்கும்' என்று பெரிய முன்னோட்டம் கொடுத்துவிட்டு அமர்ந்தார் நான் மகான் அல்ல படத்தின் இயக்குனர் சுசீந்திரன். இவர் சொன்ன இன்னொரு தகவல் ரொம்ப முக்கியமானது. 'பருத்தி வீரன் படத்திற்கு பிறகு கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவனிலும், பையாவிலும் கொஞ்சமாவது பருத்தி வீரன் சாயல் இருக்கும்னு சொல்வாங்க. இந்த படத்தில் அந்த சுவடே சுத்தமா இருக்காது. ரொம்ப மெனக்கட்டு நடிச்சிருக்கார்' என்றார்.

தனது அழகான மென் சிரிப்போடு பேச ஆரம்பித்தார் கார்த்தி. பருத்தி வீரன்ல 90 சதவீதம் அமீர் சார் இருந்தார்னா, அதில பத்து சதவீதமாவது நான் இருந்திருக்க மாட்டேனா? எனக்குன்னு இருக்கிற குணமும் அதில வெளிப்பட்டிருக்கும் இல்லையா? அதுதான் அடுத்தடுத்த படத்தில் வருதுன்னு நினைக்கிறேன். ஆனால் நான் மகான் அல்ல படத்தில் டோட்டலா வேறு மாதிரி கார்த்தியை பார்க்கலாம். வெண்ணிலா கபடிக்குழு பார்த்தவுடன் நான் பிரமிச்சு போனேன். அந்த படத்தில் நிறைய சைலண்ட் ஷாட்ஸ் இருந்திச்சு. சைலண்ட்டை திரையில் ரசிக்கிற மாதிரி சொல்றது ரொம்ப கஷ்டம். அதை சரியா செஞ்சிருந்தாரு சுசீந்திரன். நாங்க கூப்பிட்டு கதையை கேட்டோம். முதல் ஆஃப் சொல்லும்போதே என்னை விழுந்து விழுந்து சிரிக்க வச்சார். இந்த படம் ரொம்ப அற்புதமா வந்திருக்கு என்றவரிடம், நான் மகான் அல்ல என்று பேரு வச்சிருக்கீங்க. ஏதும் வில்லங்கமான சீன் இருக்கா என்றொரு கேள்வி பறந்தது கூட்டத்திலிருந்து.

நான் மகான் அல்லன்னுதானே சார் வச்சுருக்கோம். நான் மன்மதன் அல்லன்னு வைக்கலையே என்றார் கார்த்தி. பின்னாலேயே பறந்து வந்த இன்னொரு கேள்வி அந்த அரங்கத்தையே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.

இப்பல்லாம் மகான்கள்தானே மன்மதன்கள் ஆகுறாங்க

6.24.2010

நடிகை மேக்னா நாயுடு கர்ப்பமாக இருப்பதாக ஆபாச இ-மெயில்

நடிகை மேக்னா நாயுடுவின் இ-மெயில் முகவரியை தவறாக பயன்படுத்திய மர்ம ஆசாமி ஒருவன், அவர் கர்ப்பமாக இருப்பதாக அவதூறு செய்தி பரப்பி விட்டுள்ளான். இதுகுறித்து சைபர் கிரைம் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை மேக்னா நாயுடு. இவர் மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

தமிழில் நடிகர் சரத்குமாருடன் `வைத்தீஸ்வரன்` மற்றும் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில் இசை ஆல்பமும் செய்திருக்கிறார்.


கடந்த சில நாட்களாக மேக்னா நாயுடுவின் இ-மெயில் முகவரியில் இருந்து அவருடைய தோழிகளுக்கும், உறவினர்களுக்கும் தொடர்ச்சியாக இ-மெயில்கள் வந்தன. அவற்றில், “நான்(மேக்னாநாயுடு) கர்ப்பமாக இருக்கிறேன்.

ஆனால் என்னுடைய கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியவில்லை” என்று மேக்னா நாயுடு சொல்வது போல கூறப்பட்டு இருந்தது. மேலும் இந்த இ-மெயில்களுடன் சில ஆபாச படங்களும் இணைக்கப்பட்டு இருந்தன.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தோழிகளும், உறவினர்களும் மேக்னா நாயுடுவை தொடர்பு கொண்டு இ-மெயில் விபரத்தை கூறி “உனக்கு என்னாச்சு..?” என்று செல்போனில் திட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மேக்னா நாயுடு தன்னுடைய இ-மெயில் முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட இ-மெயில்களை சோதனை செய்தார். அப்போதுதான் யாரோ ஒரு மர்ம ஆசாமி தன்னுடைய இ-மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி, அவதூறு பரப்பி இருப்பது அவருக்கு தெரிய வந்தது.

உடனே அவர் கப்பரேடு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்சைட்டுகளுக்கு அஞ்சும் கே.எஸ்

கமல் - த்ரிஷா முதல் முறையாக ஜோடி சேரும் மன்மதன் அம்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு ப்ரான்ஸ், ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

படத்தின் பெரும்பகுதி வெளிநாட்டிலேயே ஷ§ட் பண்ணப்பட உள்ளது. ஏற்கனவே வேண்டும் மட்டும் டிஸ்கஷன் வைத்து வேண்டும் மட்டும் கதையை செழுமைப்படுத்திய பிறகே விமானம் ஏறினாலும், சில திருத்தங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்துச் செய்து வருகிறாராம் கே.எஸ்.

வெளிநாடுகளில் படமெடுக்கும்போது சில காட்சிகள் வலைத்தளங்களில் வந்து விடுவதால் ஸ்பாட்டில் ரசிகர்களுக்கோ செல்போன்களுக்கோ அனுமதியில்லை என்று கேஎஸ் கட்டளை விதித்திருப்பதாகவும், படம் வெளியாகும்வரை எந்தக் காட்சியும் கசிந்து விடக்கூடாதென படக்குழுவினருக்கு அன்புக் கட்டளை போட்டுள்ளார்.

6.23.2010

பிறந்தநாள் கொண்டாட்டமா? அரசியலுக்கு ஆயத்தமா?

நடிகர் விஜய் தன் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவித்தார்.

வழக்கமாக இன்றைய ஆளும்கட்சித் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டுத்தான் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது வழக்கம்.

அதே பாணியில் பிறந்த நாள் கொண்டாடுவது தற்செயலாகவா, எதிர்கால அரசியல் பிரவேசத்தை மனதில் வைத்தா என்பது எம்பெருமான் வேலாயுதபாணிக்கே வெளிச்சம்.

6.22.2010

எனது இளமையின் இரகசியம் – ஸ்ரேயா அதிரடிப் பேட்டி.

தமிழ் நாட்டின் பிரபலமான நடிகை ஸ்ரேயா இப்போது தமிழ்ப் படங்களில் பெரிதாக இல்லை. சிக்கு புக்கு, ரவுத்திரம் என்று அவர் நடிக்கும் எல்லாப் படங்களும் தயாரிப்பு நிலையிலேயே உள்ளன.ஆனாலும் அவரைப் பற்றிய கிசுகிசுகளுக்கு பஞ்சமில்லை. ரவுத்திரம் படம் ட்ராப், தெலுங்கில் ஒரு பாடலுக்கு நடனம், திருமண கிசுகிசு என அனைத்துக்கும் அலட்டாமல் பதில் வருகிறது இந்த கவர்ச்சி இளவரசியிடமிருந்து, தெலுங்கில் எஸ்.ஜே.சூர்யா இயக்கும் புலி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறீர்கள். தொடர்ந்து ஒரு பாடலுக்கு ஆடுவீர்களா? பெரிய படம், திறமையான இயக்குனர், எல்லாவற்றுக்கும் மேலாக .ஆர்.ரஹ்மான் இசை என்பதால் புலியில் ஒரு பாடலுக்கு ஆட ஒத்துக் கொண்டேன். இதுபோல் பெரிய வாய்ப்புகள் வந்தால் மட்டும் ஆடுவது பற்றி யோசிப்பேன். ஆனால் தமிழில் ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன்.

ஏன் தமிழுக்கு மட்டும் பாரபட்சம்…?

தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் நடித்தாலும் தெலுங்கை விட தமிழுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதனால்தான் ஒரு பாடலுக்கு ஆட மாட்டேன் என்றேன்.

சிக்கு புக்கு படத்தில் நீங்கள் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராமே?

இந்தப் படத்தின் கதை என்னையும், ஆர்யாவையும் சுற்றிதான் நடக்கும். நான்தான் படத்தின் ஹீரோயின். அம்‌ரிதா ராவின் தங்கை பி‌‌ரீத்தி இந்தப் படத்தில் கவுர வேடத்தில் நடிக்கிறார். இதை‌த்தான் சிலர் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் எனக்கு ஜாலியான கேரக்டர். ரொம்பப் பிடித்து நடித்து வருகிறேன். ரசிகர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.

ரவுத்திரம் படம் என்னவானது?

நான் ‌‌ஜீவா ஜோடியாக நடிக்கும் படம் இது. படம் ட்ராப் என்று வந்த செய்தியை நானும் படித்தேன். அது தவறு. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. அதில் நான் கலந்து கொள்ளவில்லை. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குகிறது. அதில் நானும் கலந்து கொள்கிறேன்.

உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானதே?

திருமணத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் இதுவரை திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. எனக்கு தகுதியானவரை நான் சந்திக்கும் போது நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன்.

வாட்ஸ் குக்கிங் படத்துக்குப் பிறகு இந்திக்கு அதிக முக்கியத்துவம் நீங்கள் கொடுப்பதில்லையே?

தீபா மேத்தாவின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அதன் ஒரு பகுதியாக அவர் தயா‌ரிப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாட்ஸ் குக்கிங் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வாங்கியிருக்கிறது. இந்தியை நான் ஒதுக்கவில்லை. சவாலான வேடங்கள் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
தெலுங்கில்…?

ரவிதேஜா ஜோடியாக டான் சீனு படத்தில் நடிக்கிறேன். நான் எதிர்பார்த்த சவாலான வேடம். விரும்பி நடிக்கிறேன்.

படத்துக்கு படம் உங்கள் அழகு கூடி வருகிறதே…?

தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். நீச்சல், யோகா இரண்டும் என்னுடைய டெ‌ய்லி அட்டவணையில் தவறுவதில்லை. என் இளமைக்கு இதுதான் காரணமாக இருக்கலாம்

6.20.2010

அ‌‌ஜீத் கார் பந்தயத்தில் இருந்து சினிமாவுக்கு திருப்பினார்

பார்முலா 2 கார் பந்தயத்தில் கலந்து கொண்ட அ‌‌ஜீத் அடுத்தடுத்தப் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் தனது திரைப்பட வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.

அ‌‌ஜீத்தின் ரேஸ் மோகம் அனைவரும் அறிந்தது. சில காலம் ரேஸிலிருந்து ஒதுங்கியிருந்தவர் மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.

நீண்ட நாட்கள் பயிற்சி எடுத்துக் கொள்ளாதது, அதிகபடியான உடல் எடை ஆகியவை காரணமாக 22 பேர் கலந்து கொண்ட போட்டியில் அ‌‌ஜீத்தால் 18வது இடத்தையே அதிகபட்சமாக பிடிக்க முடிந்தது. விபத்தில் சிக்கிய கசப்பான நிகழ்வும் நடந்தேறியது.

ரேஸில் கௌரவமான ஒரு இடத்தைப் பிடிக்க தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதாலும், நலம் விரும்பிகளின் விருப்பத்தின் பே‌ரிலும் தொடர்ந்து ரேஸில் கலந்து கொள்ளும் முடிவை வாபஸ் பெற்றிருக்கிறார் அ‌‌ஜீத்.

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கும் படத்தில் நடிக்க தற்போது தன்னை தயார்படுத்தி வருகிறார் அ‌‌ஜீத்.

ராவணன் : ஒரே நாளில் ரூ.20 கோடி வசூல்!

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கார்த்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள ராவணன் படம் முதல் நாளில் ரூ.20 கோடியை உலக அளவில் வசூலித்துள்ளதாக ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியில் அபிஷேக் பச்சனை நாயகனாகக் கொண்டும் தமிழில் விக்ரமை நாயகனாகக் கொண்டும் மற்றும் தெலுங்கிலும் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

படத்தின் முக்கிய கேரக்டர்களில் விக்ரம், அபிஷேக், ஐஸ்வர்யா ராய், கார்த்திக் தவிர பிருத்விராஜ், பிரபு, பிரியா மணி, ரஞ்சிதா, முன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று தமிழ், தெலுங்கு , இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நாளில் இப்படம் திரைக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் 2200 தியேட்டர்களில் இப்படத்தை ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.20 கோடி என ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது.